ஐபிஎல் ஏலத்திற்கு பின் தோனி படையில் இணைந்த புதிய வீரர்கள்.. சிஎஸ்கே அணியின் முழு வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின்னர் சென்னை அணியில் டேரில் மிட்செல், ரச்சின் ரவிந்திரா, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த அளவில் சென்னை அணி வலுவாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் உருவாக்கி வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். ஐபிஎல் தொடரையொட்டி மினி ஏலம் துபாயில் நேற்று நடத்தப்பட்டது.

அதிகபட்சமாக ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரூ. 24.75 கோடிக்கு வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். அடுத்ததாக ரூ. 20.50 கோடிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது.

நேற்றைய ஏலத்தில் சென்னை அணியால் வாங்கப்பட்ட வீரர்கள் விபரம்…

டேரில் மிட்செல் – உலகக்கோப்பை தொடரில் கவனம்பெற்ற நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேனை ரூ. 14 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை அணி.

ரச்சின் ரவிந்திரா – நியூசிலாந்தை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரை ரூ. 1.80 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியுள்ளது.

ஷர்துல் தாகூர் – வேகப்பந்து வீச்சாளர் – ரூ. 4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

சமீர் ரிஸ்வி – உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன். ரூ. 8.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

முஸ்தாபிசுர் ரஹீம் – வங்கதேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரூ. 2 கோடிக்கு அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

அவனிஷ் ராவ் – விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன். ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

நேற்று விலைக்கு வாங்கப்பட்ட 6 வீரர்களுக்கு செலவான தொகையை தவிர்த்து சென்னை அணியில் ரூ. 1 கோடி கைவசம் உள்ளது.

ஏலத்திற்கு பின்னர் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள மொத்த வீரர்கள் பட்டியல்-

எம்.எஸ். தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷக்யா ரஹானே , மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *