”லால் சலாம்” திரைப்படத்தின் நியூ போஸ்டர்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் ”லால் சலாம்”.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ‘லால் சலாம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இன்னும் 8 நாட்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.