பெண்களுக்கு புதிய திட்டம்! பிரதமர் மோடி பெங்களூர் புதிய Boeing கேம்பஸ்-ல் அறிமுகம்! யாருக்கு லாபம்?!

அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் புதிய குளோபல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சென்டர் கேம்பஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பெங்களூரில் திறந்து வைக்க உள்ளார்.
சுமார் 1,600 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தக் கேம்பஸ் 43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பெங்களூரில் அமைக்கப்பட்டு உள்ள இந்த அதிநவீன போயிங் இந்தியா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சென்டர் (BIETC) வளாகம், அமெரிக்காவிற்கு வெளியே இந்த விமான நிறுவனம் செய்த மிகப்பெரிய முதலீடாக உள்ளது.
பெங்களூர்: இந்தியாவின் ஐடி தலைநகரமான பெங்களூரில் புறநகர் பகுதியான தேவனஹள்ளி-யில் உள்ள ஹைடெக் டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் பூங்காவில் போயிங் நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ளது. மேலும் உலக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான அடுத்தத் தலைமுறை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் இந்திய முக்கியப் பங்கு வகிக்கும்.பெண்களுக்கான திட்டம்: மேலும் இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி ‘போயிங் சுகன்யா’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தத் திட்டம் மூலம் இந்தியாவில் வளர்ந்து வரும் விமானத் துறையில் இந்தியா முழுவதும் இருந்து அதிகப்படியான பெண்கள் நுழைவதை ஆதரிக்கப்பட உள்ளது என இத்திட்டம் குறித்து ஒரு அதிகாரி கூறினார்.போயிங் சுகன்யா திட்டம்: இந்தத் திட்டம் பெண்கள் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் துறைகளில் முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், விமானத் துறையில் வேலைகளுக்குப் பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்புகளை வழங்கும் என்று தெரிகிறது.
போயிங் சுகன்யா திட்ட பலன்கள்: இந்தியாவில் இருக்கும் இளம் பெண்கள் STEM பிரிவில் வேலைவாய்ப்புகளில் ஈடுபடவும், இத்துறையில் அவர்களுக்கான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு 150 இடங்களில் STEM ஆய்வகங்களை இந்தத் திட்டம் மூலம் உருவாக்கப்படும். பைலட் பயிற்சி பெறும் பெண்களுக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.