விஜய் டிவியின் புதிய சீரியல் கதாநாயகன் பிரேம் திருமணம்

சினிமா: விஜய் டிவியில் தற்போது புதிதாகத் தொடங்கி இருக்கக்கூடிய சீரியல், ‘நீ நான் காதல்’. இந்த சீரியலில் கதாநாயகனாக பிரேம் ஜேக்கப் நடிக்கிறார்.

இவர் மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர். தற்போது தமிழிலும் ‘நீ நான் காதல்’ சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான் இவருக்குத் திருமணம் நடந்துள்ளது. இவர் கரம் பிடித்துள்ளவர் பெரியத் திரை கதாநாயகியான ஸ்வாசிகா. இவர் மலையாளத்தில் ஒருசில படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். தமிழில், ‘வைகை’, ‘கோரிப்பாளையம்’, ‘சாட்டை’ போன்றப் படங்களிலும் நடித்துள்ளார். பிரேம்-ஸ்வாசிகா ஜோடி கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்திருக்கின்றனர்.

இப்போது இரு குடும்பத்தார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்திருக்கின்றனர். கேரளாவில் இந்த ஜோடியின் திருமணம் நண்பர்கள், உறவினர்கள் சூழ நடந்திருக்கிறது. இந்தப் புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்து, ‘நாங்கள் இனி என்றென்றும் ஒன்றாக’ எனக் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஜோடிக்கு ரசிகர்களும் சின்னத்திரைப் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *