டிவிஎஸ் மிகவும் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ள புதிய டயர்கள்!! எல்லா பைக்கிற்கும் செட் ஆகும்!

மோட்டார்சைக்கிளுக்கான டயர்களை வாங்கும்போது சிறந்த பிராண்டை தேர்வு செய்வது அவசியமாகும். அவ்வாறு கஸ்டமர்கள் பலரது வரவேற்பை பெற்றுவரும் டயர் நிறுவனமான டிவிஎஸ் யூரோகிரிப் (TVS Eurogrip) மார்க்கெட்டில் புதியதாக 4 டயர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவை என்னென்ன என்பதையும்? அவற்றின் தன்மையை பற்றியும் இனி பார்க்கலாம்.

டுராடிரைல் இபி+ சீரிஸ் (Duratrail EB+ Series): பிரத்யேகமான பிளாக் டிசைன் மூலமாக டுராடிரைல் இபி+ சீரிஸ் டயர்கள் ஆன் & ஆஃப் என இரு விதமான சாலைகளிலும் சிறந்த பிடிமானத்தை வழங்கும் என டிவிஎஸ் யூரோகிரிப் தெரிவித்துள்ளது. முன் சக்கரங்களுக்கான இந்த டயர் 90/90-17 49பி மற்றும் 90/90-21 54எஸ் என்ற அளவுகளிலும், பின் சக்கரங்களுக்கு 120/90-17, 110/80-17, 110/90-17 மற்றும் 100/90-18 என்ற அளவுகளிலும் கிடைக்கும்.

இந்த டயர்கள் மேம்பட்ட கிரிப்புக்கான டிரெட் பேட்டர்னை கொண்டுள்ளன. இந்த டயரில் வரிசையாக இருக்கும் பிளாக்குகள் மைலேஜையும், இணையாக உள்ள க்ரோவ் சேனல்கள் ஈரமான சாலையில் மேம்பட்ட கிரிப்பையும் வழங்கும். இந்த டுராடிரைல் இபி+ சீரிஸ் டயர்களை டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ், பஜாஜ் பல்சர் பைக்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் என பல்வேறு விதமான பைக்குகளில் பொருத்தலாம்.

அத்துடன், இந்த டயரில் டிரெட்ஸ் நன்கு ஆழமாக உள்ளதால், இது டயரின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும். டெர்ராபைட் டயர்களை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் தண்டர்பேர்டு பைக்குகளிலும், ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்ட்ரீம் பைக்குகளிலும் பயன்படுத்தலாம். அத்துடன், அட்வென்ச்சர் பைக்குகளுக்கும் டெர்ராபைட் டயர்கள் ஏற்றவையாக இருக்கும்.

பீமர் எச்.எஸ்+ மற்றும் ஒய்.எஸ்+ சீரிஸ் (Beamer HS+ and YS+ Series): கிட்டத்தட்ட ஒரே பெயரில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இவை இரண்டும் வெவ்வேறு விதமான பயன்களை தரக்கூடியவைகளாக உள்ளன. பீமர் எச்.எஸ்+ ரேஞ்ச் டயர்கள் மொத்தம் 3 விதமான அளவுகளில் கிடைக்கின்றன. இவை, வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க, ஈரமான சாலையிலும் சிறந்த கிரிப்பை வழங்குவதற்காக மற்றும் ரைடருக்கு சிறந்த பைக் கண்ட்ரோலை வழங்க புதிய டிரெட் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளன.

மிகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதால் பீமர் எச்.எஸ்+ ரேஞ்ச் டயர்கள் தோற்றத்திலும் ஸ்மார்ட் ஆனதாக உள்ளன. டயரின் க்ரோவ்ஸ் நன்கு அகலமாக உள்ளதால், பைக்கை வளைவுகளில் திரும்பும்போதும் சிறப்பான கண்ட்ரோல் கிடைக்கும். அத்துடன், இந்த டயரின் மத்தியிலும் க்ரோவ் வழங்கப்பட்டுள்ளதால், பைக் ஹேண்ட்லிங் சிறப்பாக இருக்கும்.

பீமர் ஒய்.எஸ்+ டயரை பொறுத்தவரையில், இது ஐரோப்பாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒய்-டிசைன் பேட்டர்ன் உடன் உள்ளதால், இந்த டயர் நகர்புற சாலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மொத்தம் 7 விதமான அளவுகளில் கிடைக்கும் புதிய பீமர் ஒய்.எஸ்+ டயர்கள் கொஞ்சம் வேகமாக வளைவுகளில் திரும்பும்போதும் சிறந்த ஸ்டெபிளிட்டியை வழங்கும். அத்துடன், வெவ்வேறான கண்டிஷனில் செல்லும்போதும் சிறந்த கிரிப்பை வழங்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *