திருச்சி மணப்பாறை-க்கு வரும் புதிய தொழிற்சாலை.. தமிழ்நாடு அரசின் மெகா திட்டம்..!!
ஏற்கனவே TNPL தனது பேப்பர், பேகேஜ் பொருட்கள், சிமெண்ட் ஆகியவைற்றைச் சுமார் 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் வேளையில் இப்புதிய திட்டம் அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.திருச்சி மணப்பாறை பகுதியில் TNPL நிறுவனம் மிகப்பெரிய தொழிற்சாலைகளை வைத்து இயக்கி வரும் வேளையில், இதே பகுதியில் 3வது தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
மணப்பாறையில் வருடத்திற்குச் சுமார் 34,000 டன் அளவிலான டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக உலகளவிலான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் மூலம் சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் TNPL நிறுவனம் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலை துவங்கி இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.TNPL நிறுவனம் திருச்சி மணப்பாறையில் மட்டும் இதுவரையில் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து பெரும் வர்த்தகத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
TNPL என அழைக்கப்படும் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் கரும்பு கழிவு பொருட்களில் ஒன்றான பாக்காஸை- பயன்படுத்திச் செய்தித்தாள் பிரிண்ட் செய்யவும் மற்றும் எழுத்துவதற்குப் பயன்படுத்தும் பேப்பர்களைத் தயாரிக்கிறது.திருச்சி மக்களுக்கு ஜாக்பாட்.. ரூ.1000 கோடி முதலீடு, 250 ஏக்கர் மெகா திட்டம்..!! இந்தத் தொழிற்சாலை தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள காகிதபுரம் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ளது.
இத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பேப்பர் அனைத்தும் உள்நாட்டில் விற்கப்படுவது மட்டும் அல்லாமல் மொத்த உற்பத்தியில் 18 சதவீதத்தை 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.1997 ஆம் ஆண்டு முதல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் TNPL நிறுவனத்தில் சுமார் 35.32 சதவீத பங்குகளைத் தமிழ்நாடு அரசு வைத்துள்ளது.