”சைரன்” படத்தின் நியூ அப்டேட்: உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரன்’. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு செல்வகுமாரி ஒளி பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ‘சைரன்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ”நேற்று வரை” பாடல் வருகின்ற 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பினை பட குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.