இன்ஸ்டா போல் வாட்ஸ்அப் ஸ்டோரியில் வெளிவந்த புது அப்டேட்..!
இந்தியாவில் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். முதலில் செய்தி பரிமாற்றம் செய்யும் செயலியாக மட்டுமே இருந்த நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு மாற்றங்கள் இதில் வந்தது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு அருமையான அப்டேட் ஒன்று வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடும் போது குறிப்பிட்ட ஒருவரை மென்சன் செய்யலாம்.
அது போலவே வாட்ஸ்ஆப் ஸ்டோரி போடும் போது விருப்பமானவரை மென்ஷன் செய்யும் அம்சம் அறிமுகமாக இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் போது நோட்டிபிகேஷன் அவருக்கு செல்லும். எனினும் இதற்கான privacy விதிகள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.