New Year Gift Ideas : இந்த புத்தாண்டுக்கு அர்த்தமுள்ள பரிசுகளை வழங்கும் வழிகள்!
புத்தாண்டுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பது மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் வழிகளுள் ஒன்று. கடையில் சென்று ஏதேனும் ஒரு பரிசுப்பொருளை வாங்கி, அதை வண்ணக்காகிதம்கொண்டு சுற்றி, ஒரு பளபளப்பான ரிப்பள் கொண்டு கட்டிக்கொடுப்பதல்ல பரிசு. உங்கள் அன்பின் வெளிப்பாடாக அது இருக்க வேண்டும். அது அர்த்தமுள்ள ஒரு பரிசுப்பொருளாக இருக்க வேண்டும். அதற்கான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு உடையோ அல்லது ஒரு கேட்ஜெட்டோ இல்லாமல் உங்கள் அன்பானவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பரிசுப்பொருளாகவும், அவர்களுக்கு பயனுள்ளதாகவும் யோசித்து தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.
நீங்கள் உங்கள் மனதுக்கு விருப்பமானவருக்கு என்ன பரிசுப்பொருள் தரவேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதை அர்த்தமுள்ளதாக்கும் வழிகளை பாருங்கள். நீங்கள் ஒருவருக்கு பாஸ்தா மேக்கர் பரிசளிக்கிறீர்கள் என்றால், பாஸ்தா செய்வது எப்படி? என்ற புத்தகத்தையும் கொடுங்கள். அப்போது அது அவர்களுக்கு மேலும் பயனுள்ளதாகவே இருக்கும்.
நீங்கள் பரிசு கொடுக்க விரும்பும் நபரிடம் ஏற்கனவே அவருக்கு தேவையான பொருட்கள் அதிகம் உள்ளது. மேலும் பொருட்களாகவே கொடுத்து நிரப்ப விரும்பவில்லையென்றால், அவர்களுக்கு நல்ல வித்யாசமான அனுபவங்களை பரிசளியுங்கள். அவர்களின் விருப்பம் மற்றும் ஹாபிக்களுக்கு ஏற்ற அனுபவங்களாக அந்த பரிசுப்பொருட்கள் இருக்கட்டும்.
நீங்கள் கிரீட்டிங் கார்ட்களை பரிசளிக்க விரும்பினால், அதில் அர்த்தம் நிறைந்த வார்த்தைகளை உங்கள் கைகளால் எழுதி பரிசளியுங்கள் அல்லது தற்போது ஆன்லைனில் நிறைய வடிவங்கள் உள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து நீங்களாகவே ஒன்றை உருவாக்கித்தரலாம்.
பரிசுப்பொருட்களை பிரித்து பார்ப்பதில் ஒரு சுகம் உண்டு. ஆனால் அந்த பிரிக்கும் அனுபவத்தையே வித்யாசமாக கொடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்களே வரைந்த அல்லது வடிவமைத்த பேப்பர் வைத்து பரிசுப்பொருளை பேக் செய்யுங்கள். அவர்கள் அவ்வளவு கலை உணர்வு கொண்டவர்கள் இல்லையென்றாலும் பிரச்னையில்லை. அவர்களுக்கு வேறு ஏதேனும் வித்யாசமான வழிகளில் அந்த அனுபவத்தை உறுதிப்படுத்துங்கள்.
எப்போதும் ஒரு பொருளாக பரிசு கொடுப்பதற்கு பதில் சாப்பிடும் ஒன்றாக இருந்தால், பரிசு மேலும் சுவை கூட்டுவதாக இருக்கும். அது உங்களுக்கு மிகவும் நெருக்கம் இல்லாதவராக இருந்தால், அவர்களுக்கு இந்த உண்ணும் பரிசுப்பொருட்களான சாக்லேட்கள் சிறந்தது. அதிலும் அவர்களுக்கு பிடித்த உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து பரிசாக கொடுங்கள். அவர்கள் மதுப்பிரியராக இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டட் மதுவை கொடுக்கலாம். இது குறிப்பாக அனைத்தும் உள்ளவர்களுக்கு சிறந்த பரிசுப்பொருளாகும்.