New Year resolution ideas: 2024ஆம் ஆண்டில் நீங்கள் ஆரோக்கியமாக வாழ 5 வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்த ஐடியா!

புதிய ஆண்டின் வருகையைக் குறிக்கும் நேரம் வந்துவிட்டது. உங்களில் பலர் ஓர் புதிய ஆண்டிற்குள் செல்லும்போது, புதிய உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். இந்த ஆண்டு, ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது என்பது இன்றைய மாறிவரும் காலகட்டத்தில் மிகவும் அவசியமானது ஆகும்.
நீங்கள் ஆரோக்கியமான இருந்தால் உங்கள் ஆரோக்கியமாக இருக்கும். சூரியன் உதயமாவதற்கு முன் நடைப்பயிற்சி செய்யுங்கள், அமைதியான இடத்தில் யோகாசனம் மேற்கொள்ளுங்கள், உங்களுக்குப் பிடித்த நபருடன் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது எதுவும் முடியவில்லையா, பரவாயில்லை. ஆரோக்கியமான உணவையாவது சாப்பிட முயற்சி எடுங்கள்.
உங்கள் தினசரி நடைமுறைகளில் இந்த சிறிய மாற்றங்களை இணைப்பது மேம்பட்ட நல்வாழ்வுக்கான அடித்தளத்தை உருவாக்கலாம். குளிபானங்களுக்கு பதிலாக தண்ணீரைத் தேர்ந்தெடுத்தாலும் சரி அல்லது தியானத்திற்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கினாலும் சரி நிச்சயம் உங்களின் இந்த நடவடிக்கையானது உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையில் பிரதிபலிக்கும்.
இதுதவிர, இத்தகைய நடவடிக்கைகள் உங்களை அந்த ஆண்டு முழுவதும் புத்துணச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
2024 இல் நீங்கள் செயல்படுத்தக்கூடிய 7 சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும்.
அவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.
நடந்து செல்லுங்கள்
இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கு பதிலாக அக்கம்பக்கம் கடைகளுக்கு செல்வதற்கு, கோயிலுக்குச் செல்வதற்கு என எந்தவொரு செயல்பாடுகளுக்கும் நடந்தே செல்ல பழகுங்கள். சோம்பேறித்தனத்திலிருந்து விலகியிருக்க இந்த நடைப்பயிற்சி உங்களுக்கு நிச்சயம் உதவும். இதய ஆரோக்கியம் மற்றும் மன நலனை மேம்படுத்த, சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்தபடி, தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
உணவில் கவனம்
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை கைவிடுங்கள். ஆரோக்கியமான மாற்றுகளை உணவில் தேர்வு செய்யுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நன்மைப்பயப்பது மட்டுமல்லாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
தண்ணீர் அருந்துங்கள்
நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், உடலில் ஆற்றலைத் தக்கவைப்பதற்கும், மனத் தெளிவை மேம்படுத்துவதற்கும் போதுமான அளவு நீர் உட்கொள்ளல் அவசியமானது ஆகிறது. இதை மருத்துவர்களும் கூறக் கேட்டிருப்பீர்கள். போதுமான நீரேற்றத்துடன் உடல் இருப்பதால், செரிமானம், உடல் வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் அறிவாற்றலுடன் சிந்திக்கும் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகள் நடக்கின்றன என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் உங்கள் நல்வாழ்வு மேம்படுகிறது.
நல்ல தூக்கம் அவசியம்
வாழ்க்கை பரபரப்புடன் தான் இருக்கும். நீங்கள் பள்ளி மாணவராக இருந்தாலும் சரி, கல்லூரி மாணவராக இருந்தாலும் சரி, அலுவலகம் செல்லக் கூடியவராக இருந்தாலும் சரி இதில் மாற்றம் இருக்காது. வீட்டில் தாய்க்கு இல்லாத வேலையா? ஒரு நாள் முழுவதும் அசராமல் உழைப்பார்கள் இல்லத்தரசிகள்.
ஆனாலும், தூக்கத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. யாராக இருந்தாலும் நிம்மதியாக தூங்குங்கள். உடல் மிகவும் முடியவில்லை என்றால் லீவ் எடுத்துக் கொண்ட கூட உறங்கச் செல்லுங்கள். தவறேயில்லை. உடலுக்கு ஓய்வு தேவை. அது மெஷின் அல்ல என்பதை உணருங்கள். எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் மூளைக்கு ஒரு நேரம் ஓய்வு கொடுக்க முடியும் என்றால் அது நித்திரை கொள்ளும் நேரம் மட்டுமே என்பதை நினைவில் வையுங்கள்.
அறிவாற்றல் திறன்கள், மனநிலை நிலைத்தன்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இரவு நேர தூக்கம் (ஒவ்வொரு இரவும் 7-9 மணிநேரம் தூக்கம்) முக்கியமானது. போதுமான தூக்கம் இருப்பின் நினைவாற்றல் தக்கவைத்தல் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
மேலும், இது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தியானம்
மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன அமைதியை மேம்படுத்தவும் தியானம் செய்யுங்கள். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது தியானம் போன்றவை நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்த ஹார்மோன் அளவைக் கணிசமாகக் குறைக்கவும் உதவுகிறது. மனக் கவலை இல்லை என்றால், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த முடியும் மற்றும் சிறந்த மன அழுத்த மேலாண்மைக்கு பங்களிக்கின்றன, சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துகின்றன.