புத்தாண்டு ராசி பலன் 2024: யார் வீட்டில் பண மழை.. 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்!
சென்னை: புத்தாண்டு புது முயற்சிகளை உருவாக்கும்.2024 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. எத்தனையோ எதிர்பார்ப்புகள் பலருக்கும் இருக்கும். நல்ல வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், பொருளாதார வளர்ச்சி என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் 2024ஆம் ஆண்டு முதல் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது. உங்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். குரு பலத்தால் உங்களுக்கு அற்புதமான மாற்றம் ஏற்படப்போகிறது. வேலை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டு முழுவதும் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பீர்கள். சொத்துக்கள் சேர்ப்பீர்கள். வசதி வாய்ப்பு பெருக்கும். 2024 ஜனவரி முதல்
உங்கள் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. பிரதோஷ காலங்களில் நந்திக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
தனுசு: 2024ஆண்டின் துவக்கத்தில் இருந்த கோடி பலன்கள் கிடைக்கப்போகிறது. காரணம் குரு பகவானின் பார்வை கிடைக்கப்போகிறது. சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. மே மாதம் முதல் குரு பகவானின் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீடு மனை,வாங்கும் வாய்ப்பும் யோகமும் கைகூடி வரும். இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும்.