அடுத்த ஹர்திக் பாண்டியா ரெடி.. கையில் பேட்டுடன் தீவிர பயிற்சி.. ராஞ்சி டெஸ்டில் என்ன நடக்க போகுதோ!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகினார். இதன்பின் இந்திய அணியின் சமநிலை வேறு மாதிரி மாறியது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைவதற்கு ஹர்திக் பாண்டியாவின் காயமும் முக்கிய காரணம்.

அந்த அளவிற்கு நன்றாக பேட்டிங் செய்ய வேகப்பந்துவீச்சாளரால் ஆட்டத்தை மாற்ற முடியும். இதன் காரணமாகவே இந்திய அணி சாதாரணமாக பவுலிங் செய்யும் சிவம் துபேவுக்கு கூட ஆதரவாக இருந்து வாய்ப்பு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் டெய்லண்டர்கள் அனைவரும் 20 ரன்களை சேர்க்கும் அளவிற்காகவாது பேட்டிங் செய்யும் வகையில் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்திய அணியின் முகமது ஷமி, பும்ரா உள்ளிட்டோர் ஓரளவிற்கு பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். முகமது ஷமி அதிரடியாக பல நேரங்களில் ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரிலும் பும்ரா சிறப்பாக ரன்கள் சேர்த்து அசத்தினார். அதேபோல் அஸ்வின், ஜடேஜாவை தொடர்ந்து குல்தீப் யாதவும் சிறப்பாகவே பேட்டிங் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ராஞ்சி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். த்ரோ டவுன் பயிற்சியாளர்கள் மூலமாக 150க்கும் அதிகமான பந்துகளை சிராஜ் எதிர்த்து பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சிராஜ் மீதான பொறுப்பும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பேட்டிங்கில் எப்போதும் உற்சாகத்துடன் விளையாடும் சிராஜ், அடுத்தடுத்த போட்டிகளில் பொறுப்புடன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு வரும் ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் உள்ளிட்டோர் இளம் வீரர்கள் என்பதால், சீனியர் வீரரான சிராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *