அடுத்தமுறை இட்லிக்கு இந்த மாதிரி மட்டன் எலும்பு குழம்பை செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்…

ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் இட்லியை செய்து, மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டால் தான், அது ஞாயிற்றுக்கிழமை மாதிரியே இருக்கும்.

உங்கள் வீட்டில் எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வழக்கம் உள்ளதா?

எப்போதும் இட்லிக்கு ஒரே ஸ்டைலில் தான் மட்டன் குழம்பை செய்வீர்களா? அப்படியானால் ஞாயிற்றுக்கிழமை மட்டன் எலும்பை வாங்கி குழம்பு செய்யுங்கள். இந்த மட்டன் எலும்பு குழம்பை இட்லியுடன் சாப்பிடுவது மட்டுமின்றி, சூப்பாகவும் குடிக்கலாம்.

உங்களுக்கு மட்டன் எலும்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் எலும்பு குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* மல்லி – 1 1/2 டீஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பட்டை – 1/2 இன்ச்

* அன்னாசிப்பூ – 1

* கிராம்பு – 3

* கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி – 1/2 இன்ச்

* பூண்டு – 2 பல்

* சின்ன வெங்காயம் – 8

* தக்காளி – 2 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 8

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* தண்ணீர் – 1 கப்

பிற பொருட்கள்…

* நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* புதினா – 1/2 கப்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மட்டன் எலும்பு – 500 கிராம்

* தண்ணீர்- தேவையான அளவு

* எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

* கெட்டியான தேங்காய் பால் – 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, மல்லி, மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து சில நொடிகள் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதன் பின் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *