பொத்தேரி ஸ்டேஷன் வாசலில் “என்.எச் 32”.. கலர்புல் ரயில் பெட்டி ஓட்டல்.. பின்னாடியே காட்டாங்குளத்தூர்

சென்னை: பொத்தேரி ரயில்வே ஸ்டேஷன் வாசலிலேயே புதிய ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.. இதனால் சென்னைவாசிகளின் கவனம் அங்கு வெகுவாக திரும்பி உள்ளது.

 

ரயில்வே துறைக்கு வருமானம் ஈட்டவேண்டுமானால், ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம்.. ஆனால், சமீபகாலமாகவே கட்டணம் உயர்த்தப்படவில்லை..

கட்டணம் உயர்வு: அதற்கு பதிலாக, ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், அதேசமயம் வருவாயையும் ஈட்டுவதற்காகு ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துவருகிறது… அந்தவகையில், காலி ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த திட்டமிடப்பட்டது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் பொத்தேரி ஆகிய 3 ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், சென்னை பொத்தேரி ஜிஎஸ்டி சாலையில் ரெயில் பெட்டி உணவகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1.5 கோடி மதிப்பில் இந்த உணவகத்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரெயில்வே அமைத்துள்ளது. 2,000 சதுர அடி பரப்பளவில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் இன்னும் 10 நாட்களில் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள்தான் வெளியாகி உள்ளது.

புதிய பெயர்: 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.1.5 கோடி செலவில் உருவான இந்த ரயில் பெட்டி உணவகத்துக்கு என்.எச் 32 அதாவது “ரூட் 32” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில், பழைய ரயில் பெட்டிக்கு புதுவண்ணம் தீட்டப்பட்டுள்ளது.. ,

ரெயில் பெட்டி ஓட்டல் முழுவதுமே பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. உள்பகுதியில் மரபலகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.. ஜிஎஸ்டி சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், ரயில் பயணிகள் என அனைவருக்குமே இந்த உணவகம் பயனளிக்க போகிறது..

டிசைனிங்: இந்த உணவகத்தில் தென்னிந்திய உணவுகள், இத்தாலிய உணவுகள், ஆசிய உணவுகள், சீன உணவு வகைகளும் வழங்கப்பட உள்ளன. இதைத்தவிர, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளதாம்.. அனைத்து வகையான சமையல்களும் தயாராவதால், தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து இதற்கெனவே சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொத்தேரியில் வசிப்பவர்களையும், ஜிஎஸ்டி சாலையில் செல்லும் பயணிகளையும் வெகுவாக கவரும் வகையில், பொத்தேரி ரெயில்வே ஸ்டேஷனுக்கு வெளியிலேயே, அழகிய முறையில், ரெயில் பெட்டி போலவே இந்த ஓட்டல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.. வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் இந்த ஓட்டல் இயங்க போகிறதாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *