22 ஆயிரத்தை கடந்த நிஃப்டி: ரிலைன்ஸ் பங்குகள் இழப்பு

இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை (பிப்.16,2024) வர்த்தக அமர்வை நேர்மறையாக நிறைவு செய்தன.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 129.95 புள்ளிகள் அல்லது 0.59% அதிகரித்து 22,040.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 376.25 புள்ளிகள் அல்லது 0.52% உயர்ந்து 72,426.64 ஆகவும் இருந்தது.

பரந்த குறியீடுகள் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளின் ஆதாயத்துடன் நேர்மறையாக முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 165.95 புள்ளிகள் அல்லது 0.36% உயர்ந்து 46,384.85-ல் முடிந்தது.
பொதுத்துறை (PSU) வங்கிகள் மற்றும் எரிசக்தி பங்குகள் வீழ்ச்சியடைந்த போது ஆட்டோ மற்றும் பார்மா பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன.

டாப் பங்குகள் உயர்வு, சரிவு நிலவரம்

நிஃப்டி 50 இல் எம்&எம், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, விப்ரோ மற்றும் மாருதி சுசுகி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன. பவர் கிரிட், பிரிட்டானியா, அப்பல்லோ மருத்துவமனை, ஆக்சிஸ் வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் முக்கிய நஷ்டமடைந்தன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *