இரவு பார்ட்டி.. செம குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி.. வீடியோ இதோ

சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மலர் டீச்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ள சாய் பல்லவி, அமரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் நாகசைதன்யாவின் தண்டல் படத்தில் நடிக்கிறார்.
பார்ட்டியின் நடனம்
இதுமட்டுமின்றி இந்தியில் உருவாகும் படம் Ek Din படத்தில் அமீர் கானின் மகனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பானின் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்காக பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.
அந்த பார்ட்டியில் செம குத்தாட்டம் போடும் நடிகை சாய் பல்லவியின் வீடியோ, தற்போது அவருடைய ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
https://twitter.com/SaiPallavi_FG07/status/1765996021749018685