கடும் குளிரில் நீலகிரி.. மினி காஷ்மீரானது நீலகிரி..!
நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வெம்மை ஆடைகள், தொப்பி அணிந்தபடி இருந்ததை காண முடிந்தது. மேலும், குளிரில் இருந்து தப்ப ஆங்காங்கே தீ மூட்டி மக்கள் குளிர் காய்ந்தனர். சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாமல் தங்கும் விடுதிகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது
உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி வீசுகிறது. இதன் காரணமாக, உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் மீது பனி உறைந்து பனி கட்டிகளாக மாறிவிடுகிறது. இதனால் உதகையின் பல பகுதிகள் காலை நேரத்தில் மினி காஷ்மீர் போல காட்சியளிக்கிறது. இன்று காலை உதகையில் கடுங்குளிர் நிலவியது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலையாக சான்டினல்லா பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.