பட்ஜெட்டில் சைலெண்டா சம்பவம் செய்த நிர்மலா சீத்தாராமன்! ரயில்வேயில் இப்படி ஒரு கருவியை பொருத்தபோறாங்க!
கடந்த 1ம் தேதி பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்காக தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய ரயில்களில் கவச் தொழில்நுட்பத்தை பொருத்துவதற்காக ரூபாய் 557 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள ரயில்கள் விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக பயணம் செய்ய கவச் என்ற தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே ரயில்வே நிர்வாகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே டிராக்கில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோத வந்தால் இது தொழில்நுட்பம் அந்த ரயிலை விபத்தில் சிக்க விடாமல் தானியங்கியாக நிறுத்தி விடும்.
இந்த தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு இடங்களில் சோதனை செய்து பல ரயில்களில் இந்த தொழில்நுட்பத்தை பொருத்தியுள்ளன. இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களுக்கும் பொருத்த திட்டமிட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கும் வகையில் தற்போது பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்காக ஒதுக்கப்பட்ட அறிவிப்பின்படி ரூபாய் 557 கோடி இந்த கவாஸ் தொழில்நுட்பத்தை பொருத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் ஜாவித் அலிகான் எழுப்பிய கேள்வியின் போது அளிக்கப்பட்ட பதில் மூலம் நமக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது.
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்ட உறுப்பினர் ஏன் கவச் தொழிற்நுட்பத்தை மிக மெதுவாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்? இதற்கான போதுமான பட்ஜெட் இல்லையா? அல்லது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி மிக மெதுவாக தான் ரிலீஸ் ஆகிறதா? எதனால் தாமதம் என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இந்த கவச் தொழில்நுட்பத்தை விரைவாக அனைத்து ரயில்களிலும் பொருத்த வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இது மிகப்பெரிய ரயில்வே விபத்துக்களை தவிர்க்கும் ஆற்றல் கொண்டது எனவும் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதிலில் தற்போது டில்லி-மும்பை மற்றும் டில்லி-ஹௌரா ஆகிய பகுதிகளில் இந்த கவச் தொழில்நுட்பத்தை கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 3000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் பாதைகளில் இந்த கவச் தொழிற்நுட்பம் பொருத்தப்படுகிறது. இதற்காக சுமார் 340 கிலோ மீட்டர் அளவில் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் 269 டெலிகாம் டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோக 186 ஸ்டேஷன்களில் கவச் தொழில்நுட்பதற்கான கருவிகளும், 170 இன்ஜின்களில் கவச் தொழில்நுட்பதற்கான கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 827 கிலோமீட்டர் தூரத்திற்கு டிராக் அருகே அமைக்கப்படும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கவச் தொழில்நுட்பத்தை முறையாக பொருத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அதற்கான கருவிகள் அமைக்கப்பட வேண்டும்.
டிராக் முழுவதும் ஆர்எஃப்ஐடி டேக் மூலம் இணைப்பு செய்ய வேண்டும். அனைத்து ரயில் இன்ஜின்களிலும் இந்த கவச் தொழில்நுட்ப கருவியை பொருத்த வேண்டும். மேலும் தொலைதொடர்புக்காக ஆங்காங்கே டவர்களை அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதிக்க வேண்டிய பகுதிகளும் உள்ளன. இந்த வேலையெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என பதில் அளித்தார்.
தற்போது கவச் தொழில்நுட்ப கருவிகளை தயாரிப்பதற்காக மூன்று தயாரிப்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கவச் தொழில்நுட்ப கருவிகளை தயாரிக்க துவங்கியுள்ளனர். மேலும் அவர்களது தயாரிப்பு கொள்ளளவை அதிகரிப்பதற்கான முயற்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தான் இந்த பட்ஜெட்டில் ரூபாய் 557 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ரயில் விபத்து என்பது மிக மோசமான அளவில் ஏற்படும் விபத்தாக இருக்கிறது. ஒரு ரயில் விபத்து நடந்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன. இதனால் இந்த ரயில் விபத்துகளைத் தவிர்க்க இந்த தொழிற்நுட்பம் மிக முக்கியமாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வர இன்னும் சில காலம் ஆகும். ஆனால் இது வந்து விட்டால் ரயில் விபத்து பெரும் அளவு குறைந்து விடும்.