நீதா அம்பானியின் அட்டகாசமான கார் கலெக்ஷன்.. அதை அலங்கரிக்கும் 100 கோடி மதிப்பிலான கார் – ஒரு பார்வை!
முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 116.1 பில்லியனுக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக நீதா அம்பானி அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்றால் அது மிகையல்ல. துவக்கத்தில் 800 ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிய கலைப் படைப்புகள், தனித்துவம் வாய்ந்த நகைகள் மற்றும் ஆடம்பர கார்களின் வரிசை ஆகியவற்றைக் கொண்ட அவரது அசாத்திய ரசனையை அவரிடம் உள்ள ஒரு கலை திறனை வெளிக்காட்டுகிறது என்றே கூறலாம். அவர் வைத்திருக்கும் கார்களில் தனித்துவம் வாய்ந்த ஒன்று தான் Audi A9 Chameleon.
ஒரு பட்டனை அழுத்தினால் போதும், இந்த சார் தன்னுடைய நிறத்தை மாற்ற அதன் உரிமையாளரை அனுமதிக்கும். மிகவும் தனித்துவமான எலக்ட்ரானிக் பெயிண்ட் சிஸ்டத்திற்கு பெயர் பெற்றது அந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதா அம்பானியிடம் உள்ள பல ஆடம்பர சொகுசு கார்களில் இதுவும் ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
ஸ்பானிஷ் வடிவமைப்பாளர் டேனியல் கார்சியால் வடிவமைக்கப்பட்ட இந்த லிமிடெட் எடிஷன் வாகனம், 4.0-லிட்டர் V8 எஞ்சின் மற்றும் சுமார் 600 குதிரைத்திறன் கொண்டது, இது நீதா அம்பானியின் சேகரிப்பில் உள்ள தனிசரிப்பு வாய்ந்த கார். இந்திய சந்தையில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.100 கோடி ஆகும். இன்னும் பல விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார் நீதா அம்பானி.
நீதா அம்பானியின் அலமாரியும் அவர் ரசணையை நமக்கு எடுத்துரைக்கின்றது. இவரது சேகரிப்பில் சென்னை சில்க்ஸ் இயக்குனர் சிவலிங்கம் வடிவமைத்த புடவை ஒன்று உள்ளதாம், அதன் விலை சுமார் ரூ.40 லட்சமாம். இந்த புடவை வைரம், தங்கம் மற்றும் மரகதம், முத்து மற்றும் பிற அரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இது உலகின் மிக விலையுயர்ந்த புடவையாகும்.