நிதிஷ் குமார் மெகா கூட்டணிக்கு தேவையில்லை: ராகுல் காந்தி
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. அணியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத நியாய யாத்திரை பீகாருக்குள் நுழைந்துள்ளது.புர்னியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல், “பீகார் மக்களுக்கு சமூக நீதி வழங்கும் பொறுப்பை மெகா கூட்டணி எடுத்துள்ளது.
இந்த அணிக்கு நிதிஷ்குமார் தேவையில்லை.நாட்டில் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியமானது.
அப்போதுதான் தலித், ஓபிசி மற்றும் பிற சாதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க முடியும்.நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் உள்ளன.
ஆனால் இவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜ.க. வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புகிறது” என்று அவர் கூறினார்.