மாருதி, ஹூண்டாய்க்கு அல்லு இல்ல…!! டாடா உருவாக்கும் இந்த காரை மக்கள் போட்டி போட்டு வாங்க போறாங்க!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் புதிய கர்வ் (Curvv) எஸ்யூவி காரின் புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படங்களில், கிட்டத்தட்ட முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் டாடா கர்வ் கார் காட்சியளிக்கிறது. இந்த புதிய டாடா எஸ்யூவி கார் குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. சமீபத்தில் டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக ஹெரியர் இவி என்ற மற்றொரு எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் ரெடியாகி வருகிறது.

அதனை தொடர்ந்து இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக கர்வ் இவி எலக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. ஆனால், போகிற போக்கை பார்த்தால் கர்வ் இவி எலக்ட்ரிக் கார் முதலாவதாக அறிமுகமாகிவிடும் போலிருக்கிறது. ஏனெனில், டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 கண்காட்சியில் கர்வ் இவி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில், முழுவதும் தயாரான நிலையில் டாடா கர்வ் இவி காட்சியளிக்கிறது. இதற்கிடையில், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த படங்களிலும், கிட்டத்தட்ட முழுமையாக வடிவமைக்கப்பட்ட நிலையில் கர்வ் இவி காட்சியளிக்கிறது. அதாவது, காரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம், அப்படியே விற்பனைக்கு கொண்டுவரும் அளவிற்கு தோற்றம் உள்ளது.

இந்த படங்களில், எல்இடி டி.ஆர்.எல்-கள் மற்றும் டாடா நெக்ஸான், பஞ்ச் மற்றும் ஹெரியர் கார்களில் இருப்பதை போன்று ஹெட்லைட்களை இணைக்கும் வகையில் லைட் பார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லைட்களை கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கர்வ் இவி கான்செப்ட் மாதிரியில் காண முடியவில்லை. அதாவது, கடந்த ஒரு வருடத்தில் கர்வ் எஸ்யூவி காரின் தோற்றத்தில் இந்த அப்டேட்களை டாடா மோட்டார்ஸ் கொண்டுவந்துள்ளது.

அதேபோன்று, காரின் முன்பக்க கிரில், பம்பர் மற்றும் ஹெட்லைட்களின் வடிவமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. காற்று உள்ளே நுழைவதற்காக வழங்கப்படும் துளைகளும் இடமாற்றப்பட்டு உள்ளன. அதாவது, இந்த ஏர் இண்டேக் துளைகள் தற்போது முன் பம்பருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கர்வ் காரின் முன்பக்கத்தில் ஸ்கிட் பிளேட்டையும் டாடா நிறுவனம் புதியதாக சேர்த்துள்ளது.

அலாய் சக்கரங்களின் டிசைன் புதியதாக உள்ளது. சக்கரங்களுக்காக வழங்கப்படும் வளைவுகள் முன்பை விட பெரியதாக காட்சியளிக்கின்றன. அதேபோல், காரின் சைடில் கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்ஸும் பொருத்தப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்களின் வடிவம் சற்று மாற்றப்பட்டுள்ளது. அதாவது, விற்பனக்கு வரும் காரின் டெயில்லைட்ஸ் இப்படித்தான் இருக்கும்.

மற்றப்படி, டாடா கர்வ் காரின் ஓட்டுமொத்த வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, 2023 ஆட்டோ எக்ஸ்போவில் எவ்வாறான தோற்றத்தில் இருந்ததோ அதே தோற்றத்தில் தான் இந்த படங்களிலும் உள்ளது. நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட அளவுகளில் பிரபலமான டாடா நெக்ஸானை விட கர்வ் கார் பெரியதாக இருக்கும். குறிப்பாக இந்த புதிய எஸ்யூவி காரின் நீளத்தை 4.3 மீட்டர்களில் எதிர்பார்க்கிறோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *