அம்பானி, அதானி இல்ல.. இந்தியாவில் ரூ.2.55 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய முதல் நபர் இவர் தான்..
முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கெளதம் அதானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பல ஆடம்பர கார்களை வாங்கி சேகரித்து வருகின்றனர். சினிமா, விளையாட்டு, பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் அவ்வப்போது தங்கள் சொகுசு கார்களில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது.
ஆனால் இந்தியாவில் ரூ.2.55 கோடி மதிப்புள்ள முதல் லோட்டஸ் எலெட்ரே (Lotus Eletre) என்ற ஆடம்பர எலக்ட்ரிக் காரை வாங்கியது யார் தெரியுமா? அது முகேஷ் அம்பானியோ அல்லது கௌதம் அதானியோ இல்லை. ஹர்ஷிகா ராவ் என்ற பெண் வாங்கி உள்ளார்.
ஹைதராபாத்தில் வசித்து வரும் அவர் இந்த சொகுசு எலக்ட்ரிக் காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிரிட்டிஷ் பன்னாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான லோட்டஸ் குழுமம் கடந்த ஆண்டு இந்தியாவில் தங்கள் வணிகத்தை தொடங்கியது.
சொகுசு ஆடம்பர கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் லோட்டஸ் நிறுவனம் எலெட்ரே இ-எஸ்யூவியை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த காரை தான் ஹர்ஷிதா ராவ் வாங்கி உள்ளார். டார்க் ரெட் கலரில் இருக்கும் அந்த காரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த எலக்ட்ரே கார் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த மின்சார கார் என்று கூறப்படுகிறது. Eletre மற்றும் Eletre S ஆகியவை 603hp டூயல்-மோட்டார் அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் காரகள் மணிக்கு அதிகபட்சமாக 600கிமீ தூரம் வரை பயணிக்கும்.
905hp, டூயல்-மோட்டார் அமைப்புடன் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் அதிகபட்சமாக 490km வரம்பு என பல அம்சங்கள் இந்த எலக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனத்தின் மூன்று வகைகளும் 112kWh பேட்டரியை கொண்டுள்ளன. இதன் மூலம் இந்த காரை 20 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும்.