பெங்களூரில் டிராபிக் தொல்லை இனி இல்லை.. ஜப்பான் டெக்னாலஜி வந்தாச்சு..!!
பெங்களூரில் வாகன ஓட்டிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு கர்நாடக மாநில அரசும் போலீஸாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனாலும் இதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
சாலைகளில் ஒருவழிப்பாதைகள், அண்டர்கிரவுண்டு பாசிங், மேம்பாலங்கள், மேஜிக் பாக்ஸ் பாசிங் போன்ற பல அமைப்புகளைச் செய்தபோதும் போக்குவரத்து நெரிசலை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மக்கள் குறிப்பாக நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஜப்பானின் புதிய சிக்னல் அமைப்பு பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தப் புதிய சிக்னல் அமைப்பு விரைவில் 28 முக்கிய சந்திப்புகளில் நிறுவப்படும். ஒவ்வொரு சந்திப்பிலும் உள்ள வாகனங்களின் அடர்த்தியின் அடிப்படையில் சிக்னல்கள் தானாக மாறுவதற்கு உதவும்.
ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம் சமீபத்தில் பெங்களூரின் கென்சிங்டன் சாலை மற்றும் அல்சூர் அருகே மர்பி சாலை சந்திப்பில், வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு செயல்படுத்தப்பட்டது.
வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்காக அல்சூர் அருகே கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் ஜப்பானிய MODERATO (மனேஜ்மென்ட் ஆஃப் ஒரிஜின்-டெஸ்டினேஷன்-ரிலேட்டட் அடாப்டேஷன் ஃபார் டிராஃபிக் ஆப்டிமைசேஷன்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய போக்குவரத்து சிக்னல் அமைப்பு சமீபத்தில் செயல்படுத்தப்பட்டது.
பெங்களூருவில் உள்ள எம்.ஜி.சாலை, ஓசூர் சாலை மற்றும் பழைய மெட்ராஸ் சாலை ஆகிய 28 முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்படவுள்ள இந்த போக்குவரத்து சிக்னல்கள் பல்வேறு காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது.
ஆனால் இவற்றை செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, இந்த சந்திப்புகளில் வாகனங்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், போக்குவரத்து சிக்னல் டைமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சந்திப்பிலும் உள்ள வாகனங்களின் அடர்த்தியின் அடிப்படையில் சிக்னல்கள் தானாக மாறுவதற்கு இந்தப் புதிய அமைப்பு உதவும். கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் நிறுவல் மற்றும் மாறுதல் செயல்முறைகளை சரிபார்க்க தற்காலிகமாக (ஒரு வாரத்துக்கு) இயக்கப்பட்டது.
சிக்னல்களின் உண்மையான சோதனை பிப்ரவரி 2024 கடைசி வாரத்தில் இருந்து தொடங்கும் என்று நகர்ப்புற நிலப் போக்குவரத்து இயக்குநரக ஆணையர் தீபா சோழன் கூறினார்.