இனி US Dollar தேவையில்லை., இந்தியவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே புதிய ஒப்பந்தம்
அமெரிக்க டொலருக்கு பதிலாக இனி, இந்தியாவும் இந்தோனேசியாவும் உள்ளூர் நாணயங்களில் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பேங்க் இந்தோனேஷியா (BI) உள்ள உள்ளூர் கரன்சிகளான இந்திய ரூபாய் (INR) மற்றும் இந்தோனேசிய ரூபியா (IDR) ஆகியவற்றில் எல்லை தாண்டிய வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்க ஒப்புக்கொண்டன.
இந்த ஒப்பந்தம் மார்ச் 7 மும்பையில் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் வங்கி இந்தோனேசியா கவர்னர் பெர்ரி வார்சியோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம், இனிமேல் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தக பரிவர்த்தனைகள் அமெரிக்க டொலருக்கு (USD) பதிலாக இந்திய ரூபாய் (INR) மற்றும் இந்தோனேசிய ரூபியாவில் (IDR) செய்யப்படும்.
இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உள்ளூர் நாணயங்களில் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் துறையில் ஒத்துழைப்பதற்கான ஒரு அமைப்பை நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தம், இருதரப்பு INR மற்றும் IDR இன் பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட அனைத்து current account பரிவர்த்தனைகள், அனுமதிக்கப்பட்ட capital account பரிவர்த்தனைகள் மற்றும் பிற பொருளாதார மற்றும் நிதி பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது.
இந்த அமைப்பு ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் உள்நாட்டு நாணயங்களில் விலைப்பட்டியல் மற்றும் பணம் செலுத்த உதவுகிறது, INR-IDR அந்நிய செலாவணி சந்தையின் வளர்ச்சியை செயல்படுத்துகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் “உள்ளூர் கரன்சிகளின் பயன்பாடு செலவுகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான தீர்வு நேரத்தை மேம்படுத்துகிறது..,
இருதரப்பு பரிவர்த்தனைகளில் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது இறுதியில் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தவும், பொருளாதார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நீண்ட வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்” என்று கூறப்பட்டுள்ளது.