ஷோரூம் போக தேவையில்லை! ரூ1.32 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை வாங்குவது எப்படி?

இந்தியாவில் கார் வாங்க வேண்டும் என்றால் நாம் உடனடியாக கார் ஷோரூம்விற்கு செல்வோம். அல்லது ஏற்கனவே பயன்படுத்திய காரை வாங்க வேண்டும் என்றால் செகண்ட் ஹேண்ட் கார் டீலரிடம் சென்று காரை வாங்குவதற்காக முயற்சி செய்வோம். ஆனால் இவை இரண்டும் இல்லாமல் மற்றொரு வழியிலும் இந்தியாவில் கார் விற்பனையாகி வருகிறது. பலருக்கும் இந்த வழி தெரிவதில்லை. இதைப் பற்றி தான் விரிவாக காணப்போகிறோம்.

இந்தியாவில் நாம் பாதுகாப்பாகவும் சந்தோசமாவும் நம் குடும்பத்துடன் வாழ்கிறோம் என்றால் எங்கோ எல்லையில் ஒரு ராணுவ வீரன் மிகக் கடுமையாக தியாகம் செய்து கொண்டிருக்கிறான் என அர்த்தம். அவர் அங்கு செய்யும் தியாகத்தால் தான் நாம் இங்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன.

முக்கியமான சலுகையாக ராணுவ வீரர்களுக்கு ராணுவ கேண்டீன் என்பது மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தியா முழுவதும் ஆங்காங்கே ராணுவ கேண்டீன்கள் உள்ளன0 இங்கு ராணுவத்தினர் குறைந்த விலையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் ஒவ்வொரு வகையில் கேண்டீன் என்பது பயன்படும்.

இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இந்த ராணுவ கேண்டீன் மூலம் வரும் கிடைக்கும் பொருட்களை வைத்து மிகக்குறைந்த செலவிலேயே குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்ள முடியும். ராணுவ கேண்டீன்களில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல.

ராணுவ கேண்டின்களில் கார், பைக்குகள் கூட விற்பனையாகிறது. சிலருக்கு ராணுவ கேண்டினில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் விற்பனையாகும் செய்தி தெரிந்து இருக்கும். ஆனால் கார் விற்பனை செய்யப்படுகிறதா என்ற கேள்வி அவர்களுக்கு இருக்கும். ஆம் ராணுவ கேண்டீன்களில் கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படியாக ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் என்ற கார் விற்பனையாகி வருகிறது.

நாம் இங்கே இந்திய ராணுவ கேண்டீன்களில் விற்பனையாகும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கும் ஷோரூமில் விற்பனையாகும் அதே காருக்கும் என்ன விலை வித்தியாசம் ஏற்படுகிறது? இதனால் ராணுவ வீரர்கள் எவ்வளவு பலனடைகிறார்கள் என்பதை தான் இங்கே நாம் காண போகிறோம். ராணுவ கேண்டினில் அப்படி என்ன மலிவாக இருக்கும் என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் லட்சக்கணக்கில் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் மொத்தம் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன அதன்படி 1.2 லிட்டர் பெட்ரோல், மேனுவல் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக், 1.2 லிட்டர் சிஎன்ஜி மேனுவல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இதில் அனைத்து வேரியன்ட் களும் ஷோரூமில் கிடைப்பது போல ராணுவ கேண்டீன்களிலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் குறைந்த விலை வேரியன்டாக ஏரா என்ற வேரியன்ட் இருக்கிறது. இந்த வேரியண்ட் எக்ஸ்ஷோரூமில் ரூ5.92 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதே கார் ராணுவ கேண்டீனில் ரூபாய் 5.03 லட்சம் என்ற விலையில் தான் விற்பனை ஆகிறது.

அதாவது ரூபாய் 88 ஆயிரம் குறைவான விலையில் விற்பனை ஆகிறது. இதே போல மேக்னா என்ற கார் ஷோரூமில் ரூபாய் 6.78 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் 5.80 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது இது ரூ98 ஆயிரம் ரூபாய் குறைவாகும்.

இந்த காரின் ஸ்போர்ட்ஸ் இஎக்ஸ்இ என்ற வேரியன்ட் ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை. ஸ்போர்ட் வேரியன்டை பொறுத்தவரை ரூ 7.36 லட்சம் என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ராணுவ மார்க்கெட்டில் ரூ 6.31 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகிறது.

இந்த வேரியன்ட் காரில் ரூ1.04 லட்சம் பணம் மிச்சம் ஆகும். ஸ்போர்ட்ஸ் டூயல் டோன் காரைப் பொறுத்தவரை ரூ7.60 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூபாய் 6.53 லட்சம் என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. இதன் வித்தியாசம் ரூபாய் 1.07 லட்சமாகும்.

அஸ்டா வேரியன்டை பொருத்தவரை ரூ 7.99 லட்சம் என்ற விலையில் எக்ஸ் ஷோரூமில் விற்பனை ஆகிறது0 இதே கார் ராணுவ மார்க்கெட்டில் ரூ 6.88 லட்சம் என்ற விலையில் தான் விற்பனை ஆகிறது. ரூபாய் 1.11 லட்சம் ராணுவ வீரர்களுக்கு லாபமாக அமைகிறது. நாம் மேலே குறிப்பிட்டது எல்லாம் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் இன்ஜின் கொண்ட கார்களாகும். தொடர்ந்து 1.2 லிட்டர் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் கார்களை பற்றி காண்போம்.

இந்த ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் முதல் வேரியண்டாக இருப்பது மேக்னா கார்தான். இது எக்ஸ் ஷோரூமில் ரூபாய் 7.42 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ மார்க்கெட்டில் ரூபாய் 6.46 லட்சம் தான். இதை வாங்குவதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு ரூபாய் 96 ஆயிரம் மிச்சம் செய்யப்படும். இதிலும் ஸ்போர்ட்ஸ் இஎக்ஸ்இ வேரியன்ட் ராணுவ மார்க்கெட்டில் கிடையாது.

இதன் மூலம் ரூபாய் 1.25 லட்சத்தை மிச்சப்படுத்த முடியும். ஸ்போர்ட் வேரியன்ட் ரூபாய் 8.23 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ மார்க்கெட்டில் ரூபாய் 6.90 லட்சம் தான் இதை வாங்குவதன் மூலம் ரூபாய் 1.32 லட்சம் வரை ராணுவ வீரர்களால் மிச்சம் செய்ய முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *