இனி IIT, IIM கல்லூரியை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை.. ரூ.85 லட்சம் சம்பளம் பெற்ற மாணவி..!!

அண்மைக்காலமாகவே இந்தியாவில் பட்டதாரி மற்றும் முதுகலை மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பேக்கேஜ்களில் கணிசமான சம்பளம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. சில நிறுவனங்கள் பிரஷ்ஷாக முடித்த பட்டதாரிகளுக்கு ரூ.1 கோடிகூட சம்பளமாக அளித்துள்ளது.

இந்த நிலைமை ஐஐடி, ஐஐஎம் போன்ற பிரபல கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கிடைக்கிறது பெரும் ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நயா ராய்பூர் (ஐஐஐடி-என்ஆர்) போன்ற பிற அரசு கல்வி அமைப்புகளில் இத்தகைய அதிகப்படியான சம்பள வாய்ப்பைப் பெறப்பட்டு உள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஐஐஐடி-என்ஆரில் படித்த பிடெக் மாணவரான ராஷி பக்கா, 2023ல் ஐஐஐடி-என்ஆரில் எந்த மாணவருக்கும் வழங்கப்படாத அளவுக்கு அதிகபட்சப் பேக்கேஜான, ஆண்டுக்கு ரூ. 85 லட்சம் சம்பளம் என தொகையை பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.

இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ராஷி பக்கா ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு வேறொரு நிறுவனத்திலிருந்து ஒரு வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தார். இருப்பினும், கூடுதல் சம்பளத்தை எதிர்பார்த்து அவர் செய்த முயற்சியில் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே வாங்கியதிலிருந்து ரூ.25 லட்சம் அதிகமாக இப்போது பெற்றுள்ளார்.

இது பற்றி ஐஐஐடி மீடியா ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் ராஷி பாக்கா தனக்கு முதலில் கிடைத்த வேலைவாய்ப்பிலேயே திருப்தி அடைந்திருந்தாக கூறினார். ஆனால் அவர்களது நண்பர்கள் அறிவுறுத்தியதால் மேலும் வாய்ப்பை முயற்சிக்க இந்த சம்பளத்தை பெற்றார் என்றார்.

இந்த ஆண்டு ராஷி பக்காவைத் தேர்ந்தெடுத்த அதே நிறுவனம், முந்தைய ஆண்டில் ஐஐஐடி-என்ஆரில் இருந்து சிங்கி கர்தாவைத் தேர்ந்தெடுத்தது. அவருக்கு ஆண்டுக்கு ரூ. 57 லட்சம் பேக்கேஜை வழங்கியது.

ஐஐஐடி-என்ஆரைச் சேர்ந்த மற்றொரு மாணவர் யோகேஷ் குமார், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் பணிக்காக ஆண்டுக்கு ரூ. 56 லட்சம் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார். பாக்சிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கியவர்.

2020 ஆம் ஆண்டில், ஐஐஐடி-என்ஆர் மாணவர் ரவி குஷாஷ்வா, ஒரு பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு ரூ. 1 கோடி வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோவிட் 19 தொற்றுநோய் பரவல் காரணமாக அவரால் நிறுவனத்தில் சேர முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில் தொற்றுநோயினால் மாணவர்கள் இதுபோன்ற கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

ஐஐடி-என்ஆர் வேலைவாய்ப்பு அலுவலகத் தகவல் படி நடப்பு பேட்ச் மாணவர்களுக்கு சராசரி சிடிசியாக ஆண்டுக்கு ரூ.16 லட்சமும், மீடியன் சிடிசியாக ரூ.13.6 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

IIIT-NR கல்லூரி சர்வதேச தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம், 2013 மூலம் நிறுவப்பட்டது, இது சத்தீஸ்கர் அரசு மற்றும் NTPC லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான நிறுவனமாகும். இக்கல்லூரியில் சேர JEE தகுதி தேர்வு எழுத வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *