எண்ணெய் தேவையில்லை, சமைக்கவும் வேண்டாம்: இப்படி செய்தால் சூப்பர் கட்லெட் ரெடி
இது முற்றிலும் அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாத முறையில் கட்லெட் செய்யும் முறை.
தேவையான பொருட்கள்
புடலங்காய் 1
தண்ணீர்
கொஞ்சம் இந்து உப்பு
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
வறுத்த வேர்கடலைப் பொடி 1 ஸ்பூன்
முந்திரி பொடி 1 ஸ்பூன்
பாதாம் பொடி 1 ஸ்பூன்
பெப்பர் பொடி கால் ஸ்பூன்
சீரகப் பொடி அரை ஸ்பூன்
பீட்ரூட் ஜூஸ் 2 ஸ்பூன்
செய்முறை : புடலங்காய்யை வட்டமாக வெட்டவும். நடுப்பகுதியில் உள்ள சதையை நீக்கவும். இதை தண்ணீரில் இந்து உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் அப்படியே விடவும். இரு பாத்திரத்தில் வேர்கடலை பொடி, தேங்காய் துருவல், பாதாம் பொடி, முந்திரி பொடி, சீரகப் பொடி, பெப்பர் பொடி சேர்த்து கிளரவும். அதில் பீட்ரூட் சாறு சேர்த்து கிளரவும். இதை புடலங்காய் நடுவில் வைத்தால், புடலங்காய் கட்லெட் ரெடி.