இனி யாரும் தப்ப முடியாது.. வருமான வரி செலுத்த வந்தாச்சு புதிய ரூல்ஸ்
இந்தியாவில் வருமான வரி சட்டத்தின்படி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.
மத்திய அரசில் நிர்ணயம் செய்துள்ள நாட்களுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் வசூலிக்க நேரிடும். இந்த நிலையில் மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டுக்கான புதிய வருமான வரி ரிட்டன் படிவங்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவம் அமலில் இருக்கும்.
அதன்படி ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர் 1 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை தொழில் மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர் 4 படிவமானது நிறுவனங்களுக்கானது.
இந்த புதிய படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்த புதிய படிவத்தில் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பண ரசீது விவரங்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.