தமிழகத்தில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

திருவள்ளுவர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்ததும், சனாதன துறவி என்று குறிப்பிட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாள்ளுவர் தின வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!. என்று சமத்துவ பொங்கல் என்ற ஹேஷ்டாக்குடன் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

மேலும், திருவள்ளுவர் தினத்தையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்திய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *