அடை தோசையை இப்படி மொறு மொறுன்னு செய்து கொடுத்தால் போதும்னு யாரும் சொல்லவே மாட்டாங்க
அடை தோசை என்பது பருப்பு மற்றும் அரிசி கலவையைப் பயன்படுத்தி செய்யப்படும் அதிக சத்தான, புரதம் நிறைந்த காலை உணவாகும்.
அடை தோசையை அனைவருக்கும் பிடித்த விதமாக மொறு மொறுவென்று எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்…
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
பச்சரிசி – 1/4 கப்
உளுந்து – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
தேங்காய் – 1/4 மூடி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து என அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து அலசி ஒன்றாக சேர்த்து சுமார் 4 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
பிறகு கால் மூடி தேங்காயை எடுத்து கிறி சிறு சிறு பல்லாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
அனைத்தும் நன்றாக உறியவுடன் அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம், தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மாவுடன் நறுக்கிய தேங்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை தோசை கல்லில் ஊற்றவும்.
சிறிது நேரம் கழித்து தோசை மேலே சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
இந்த சுவை மிகுந்த மொறு மொறு அடை தோசையை தேங்காய் சட்னி அல்லது சர்க்கரை தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.