திருமணத்தில் நோ போட்டோஸ், நோ செல்ஃபி… நடிகை கறார் கண்டிஷன்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்டநாள் காதலர் ஜாக்கி பக்னானியை நாளை திருமணம் செய்கிறார். இதனை முன்னிட்டு, திருமணம் நடக்கயிருக்கும் கோவா, ஐடிசி கிரான்ட் ரிசார்ட் பிரமாண்டமான முறையில் தயாராகியுள்ளது.
மாடலிங் செய்து வந்த ரகுல் ப்ரீத் சிங் 2009 ல் வெளியான கன்னட படம் கில்லியில் அறிமுகமானார். இது, செல்வராகவன் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனியின் கன்னட ரீமேக்காகும். 2011 ல் தெலுங்கிலும், 2012 ல் தடையற தாக்க படத்தின் மூலம் தமிழிலும் ரகுல் ப்ரீத் சிங் அறிமுகமானார். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் படங்கள் இவரை பிரபலப்படுத்தின. 2014 இல் யாரியன் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
ரகுல் ப்ரீத் சிங் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர். இவர் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பக்னானி கொல்கத்தாவைச் சேர்ந்தவர். நடிகராக பிரபலமாக முடியாமல் போக, நடிப்புடன் படங்கள் தயாரித்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி திருமணம் நாளை தெற்கு கோவாவில் உள்ள ஐடிசி ரிசார்ட்டில் நடக்கிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நேற்றே தொடங்கிவிட்டன. பிரபல நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்வதால், அவர்களின் பிரைவசியை முன்னிட்டு போட்டோக்கள், செல்ஃபிகள் எடுப்பதை தடை செய்துள்ளனர். அதேபோல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்பட பல விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருக்கும் போட்டோகிராஃபர்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், ரகுல் – பக்னானி திருமண புகைப்படத்தை வெளியிட மீடியாக்கள் விலைபேசி வருகின்றன.