No Sugar Challenge: சர்க்கரைக்கு நோ சொன்னா கிடைக்கும் நன்மைகளின் லிஸ்ட் இதோ
சர்க்கரை பயன்பாட்டின் காரணமாக நீழிரிவு நோய் வருவதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. சர்க்கரையை சேர்ப்பதால் உணவுகளின் சுவை கூடுகிறது என்பது உண்மை. ஆனால் சர்க்கரையை சேர்ப்பதால் உடலில் நோய்களும் கூடுகின்றன. சர்க்கரையை தவிர்ப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சர்க்கரை மீதான ஆசையை கட்டுப்படுத்துவது மிக கடினம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சுவைக்காக ஏங்குகிறார்கள். எனினும் எதுவுமே அளவிற்கு அதிகமானால் விஷம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரையால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உலக மக்களை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு நோய்க்கு மூல காரணம் சர்க்கரை. சர்க்கரையை தவிர்ப்பதால் நம் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறது. இதனால் டைப் டூ நீரிழிவு நோய்க்கான அபாயமும் குறைகிறது
சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளில் கலோரிகளும் அதிகமாக இருக்கும். பொதுவாக இனிப்பான உணவுகளில் நார்ச்சத்தும் குறைவாகவே உள்ளது. ஆகையால் இனிப்பான உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு மிக எளிதாக எடை அதிகரித்து விடுகின்றது. சர்கரையை தவிர்ப்பதால் நமது கலோரி உட்கொள்ளலும் குறைகிறது. இதனால் சர்க்கரையை தவிர்ப்பது எடையை குறைக்க மிகவும் உதவும்
சர்க்கரையை உணவில் சேர்ப்பது இரத்த அழுத்தம், உடல் உப்பசம் ஆகியவற்றை ஏற்படுத்துவதால் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகரிக்கின்றன. சர்க்கரையை தவிர்ப்பது இதயத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதோடு இதய நோய்களையும் தவிர்க்கிறது
பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு சர்க்கரை ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. சர்க்கரையை தவிர்ப்பதால் பற்களின் ஆரோக்கியம் மேம்படும். பற்களில் சொத்தை ஏற்படும் பிரச்சனை வராது.
சர்க்கரையை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் ஆற்றல் உடனடி ஆற்றலாக இருந்தாலும் அது விரைவாக குறைந்த விடுகிறாது. சர்க்கரையை தவிர்ப்பது இரத்த சர்க்கரை அளவுகளை சீராக வைத்து நம் மனநிலையை நேர்மறையாக வைக்கும். நாள் முழுதும் நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும்
உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலைகளை அது பாதிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.