ஷாருக்கானுக்கு நோ; ஆனால் விஜய்க்கு டபுள் ஓகே சொன்ன த்ரிஷா!
நடிகர் விஜய்யுடன் 6வது முறையாக த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழில் கில்லி படத்தின் மூலம் நடிகை த்ரிஷா தான் விஜய்க்கு சரியான ஜோடி என ரசிகர்கள் கருதும் அளவுக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது. அதன்பின் திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் மீண்டும் இணைந்து நடித்தனர்.
அடுத்தடுத்து இந்த ஜோடி ஹிட் படங்களை கொடுத்தது. பிறகு பல ஆண்டுகள் கழித்து 5வது முறையாக கடந்த ஆண்டு லியோ படத்தில் த்ரிஷா விஜய்யுடன் இணைந்திருந்தார்.
கேமியோ ரோல்
இந்நிலையில், ண்டும் விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் அப்பா விஜய்க்கு சினேகாவும் மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடி என தகவல்கள் வெளியாகின.
தற்போது, த்ரிஷா கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. முன்னதாக ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலேயே த்ரிஷாவை ஒரு பாடலுக்கு ஆட அட்லீ அழைத்தாராம். ஆனால் அப்போ முடியாது என சொன்ன த்ரிஷா கோட் படத்தில் மட்டும் ஓகே சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.