‘No Vacancy’ போர்டை மாட்டபோகும் பெரிய டெக் நிறுவனங்கள்! அப்போ டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ கதி என்ன?!
சர்வதேச அளவில் முதலீட்டுச் சந்தையும் வேலைவாய்ப்பு சந்தையும் மோசமாக இருக்கும் வேளையில், இந்திய டெக் துறையில் வடிவமைப்பும் முக்கியப் பணியைச் செய்யும் இந்தியாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களான FAAMNG முக்கியமான முடிவை எடுக்கக் காத்திருக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனக் கூறப்படும் வேளையில் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளதாகச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது, இதன் தாக்கம் சர்வதேச அளவில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் 2022 இறுதி காலகட்டத்தைப் போல் மீண்டும் பணிநீக்கம் அறிவிக்கும் எனத் தகவல்கள் கசிந்து வரும் வேளையில் இந்தியாவில் இருக்கும் FAAMNG நிறுவனங்களின் நிலை டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
FAAMNG என்பது பேஸ்புக், அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ், கூகுள் ஆகிய நிறுவனங்களின் முதல் எழுத்துக்களின் கோர்வை. இந்த FAAMNG இந்நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகத்தை அமைத்துப் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் வேளையில் தற்போது புதிதாக ஊழியர்களைச் சேர்ப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 2023 ஆம் ஆண்டு முடியும் வேளையில் இந்த ஆண்டு FAAMNG நிறுவனங்கள் பதிவிட்டு உள்ள காலி வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 2022-ஐ ஒப்பிடுகையில் 90 சதவீதம் குறைந்துள்ளது.
இதன் மூலம் 2024 ஆம் ஆண்டு மொத்தமாக இந்தியாவில் பணியில் சேர்க்கப்படுவதை FAAMNG நிறுவனங்கள் நிறுத்திவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. FAAMNG நிறுவனங்களில் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்த காலி வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை ஒப்பிடுகையில் சுமார் 98 சதவீதம் சரிந்து தற்போது வெறும் 200 காலி வேலைவாய்ப்புகள் மட்டுமே இந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்புகளாகப் பட்டியலிட்டு உள்ளது. சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருக்கும் வேளையில் FAAMNG நிறுவனங்களில் லாஞ்ச் செய்யப்படும் திட்டங்கள் தாமதமாகும் என்பதால் புதிய வேலைவாய்ப்புகள் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.
அதிக மதிப்பீடு, பண பலம் கொண்ட FAAMNG நிறுவனங்களுக்கே இந்தக் கதி என்றால் இந்திய நிறுவனங்களின் நிலை. இந்தியாவில் இன்போசிஸ் ஏற்கனவே இந்த வருடம் கேம்பஸ் இண்டர்வியூவ் போகவில்லை எனத் தெரிவித்துள்ளது, இதேபோல் வெளியிலிருந்து அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதைக் குறைத்துள்ளது. இதேபோல் டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகியவை உயர்மட்டத்தில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்திருந்தாலும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.