“வங்கி கணக்கில் என்னை நாமினியாக சேர்த்திடு”.. மறுத்த பெண் நீதிபதி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்..!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஷாபுரா நீதிமன்றத்தின் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வந்தவர் நிஷா நபித் (40).
இவரது கணவர் மணீஷ் சர்மா. இவர்கள் 2020 இல் திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து மணிஷ் ஷர்மா எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருந்தார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், நிஷா நபித்திடம் மனீஷ் சர்மா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில், நிஷா நபித்தின் அரசு சேவை புத்தகம், காப்பீடு மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றில் தன்னை நாமினியாக பரிந்துரைக்க வேண்டும் என மனிஷ் சர்மா வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணீஷ் சர்மா, தலையணையால் நிஷா நபியின் கழுத்தை நெரித்தால் மயங்கியுள்ளார். இதனையடுத்து மயநிஷா நபித் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வழிந்ததால் சுயநினைவின்றி நிஷா நபித் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.