2 நாள் வரை கெட்டுப்போகாத லெமன் ரைஸ்; செம்ம சுவையாக இருக்கும்

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

மிளகாய்வற்றல் – 3

பச்சைமிளகாய் – 3

துருவின இஞ்சி – 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் – சிறிதளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

உப்பு – சிறிதளவு

கறிவேப்பிலை – 1 இணுக்கு

கொத்தமல்லி – அலங்கரிக்க

நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு – ஒரு கைப்பிடி

செய்முறை: சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்) வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும். கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். மற்றொரு கடாயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும். தாளித்த

பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும். சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி. புளிப்புச் சுவை அதிகம் வேண்டுமானால் மற்றொரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறுசேர்த்துக் கொள்ளவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *