வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்… பக்தர்கள் முகச்சுளிப்பு… !

அந்த வகையில் தற்போது பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை ,தென்கலை பிரிவினர் இடையே அடிதடி சண்டை நடந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவது குறித்த மோதல் இன்று உருவானது பக்தர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தில் பெருமாள் வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவார். நடப்பாண்டிலும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படியுடன் பழையசீவரம் கிராமத்தில் மலை மீது எழுந்தருளினார்.இங்கு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள், நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மீண்டும் மலையில் இருந்து ஒய்யாரமாக புறப்பட்டார்.

மலையிலிருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் எதிர்கொண்டு அழைப்பதாக ஐதீகம். இதற்காக 2 பெருமாள்களும் ஒன்றிணைந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து காட்சி அளித்தனர். நேற்று பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் திடீரென கைகளைப்பாக மாறி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டனர் அங்கிருந்த பொதுமக்கள் இதனைக் கண்டு முகம் சுளித்தனர். ஏற்கனவே வடகலை தென்கலை பிரிவினருடைய பிரபந்தம் பாடுவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை ,தென்கலை பிரிவினர் இடையே அடிதடி சண்டை நடப்பது பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *