ஒரு ரூபாய்கூட செலவு இல்லை… ரூ.7 லட்சம் வரை காப்பீடு உண்டு… பலருக்கும் தெரியாத EDLI திட்டம்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கு வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான (Employees’ Deposit Linked Insurance (EDLI)) தொகை 7 லட்சம் ரூபாய் ஆகும். இந்த EDLI இன்சூரன்ஸ் திட்டம் ஈபிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் உள்ளது. இதை அவர்களின் குடும்பத்தார் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஈபிஎஃப் திட்டத்தில் 60 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுடைய ரூ.15 கோடி நிதியை இந்த அமைப்பு நிர்வகித்து வருகிறது. சுமார் 1.8 லட்சம் கோடி ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் மூலமாக ஈபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அதே போல் பணியாளர்கள் ஓய்வுபெறும் சமயத்தில் அவர்களுக்கு பெரிதும் கை கொடுப்பதும் வருங்கால வைப்பு நிதித் திட்டம் தான். இதில் ஊழியர்களின் நலனின் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், எவ்வித தொகையும் ஊழியர்கள் செலுத்தாமலே இலவசமாக ரூபாய் 7 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை பெறலாம். EPFO ஊழியர்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் தான். இந்த திட்டம் எப்படி செயல்படும் என்றால் ஊழியர் பணியில் இருக்கும் போது உயிரிழந்தால், EPFO உறுப்பினரின் நியமனதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு அதிகபட்சமாக ரூபாய் 7 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
உறுப்பினர் தனது மரணத்திற்கு 12 மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக பணியில் இருந்தால் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய்க்கான சலுகை கிடைக்கப்பெறும். EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்திலிருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது. உங்கள் குடும்பத்தாருக்கு இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்க நீங்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்று தான். பிஎஃப் கணக்கில் நாமினேஷன் பெயரை கட்டாயம் சேர்த்து இருக்க வேண்டும். இதுவரை சேர்க்கவில்லை என்பவர்கள் விரைவாக அதை செய்யவும்.
EDLI நாமினேஷன்
EDLI திட்டத்திற்காக தொழிலாளர் ஒருவர் தனியாக எந்த ஒரு நாமினேஷனையும் நிரப்ப தேவையில்லை. EPF -க்காக நிரப்பப்பட்ட நாமினேஷன் EDLI மற்றும் EPS ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
EDLI படிவம் :
EDLI திட்டத்திற்காக ஒருவர் நிரப்ப வேண்டிய படிவம் என்பது படிவம்-51F ஆகும்.
EPF சப்ஸ்கிரைபர் இறந்துவிடும் பட்சத்தில், அவரது நாமினி அல்லது சட்ட ரீதியான வாரிசு இன்சூரன்ஸ் கவரேஜை கிளைம் செய்து கொள்ளலாம். இதற்கு நாமினியின் வயது குறைந்த பட்சம் 18 வருடங்களாக இருக்க வேண்டும். ஒருவேளை நாமினி ஒரு மைனராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக கார்டியன் படிவத்தை நிரப்பலாம்.
படிவம்-5IF ஆஃப்லைனில் நிரப்பப்படுகிறது. இந்த படிவத்தை அட்டஸ்டேஷன் பெற்ற பிறகு ரீஜினல் EPF கமிஷனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த படிவத்தில் இறந்தவரின் விவரங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அதில் இறந்த தேதி, நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, PF அக்கவுண்ட் நம்பர் போன்றவை அடங்கும்.
இதைத்தவிர, படிவத்துடன் சேர்த்து EPFO மெம்பரின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் ஒரு கேன்சல் செய்யப்பட்ட செக் போன்ற சில முக்கியமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை மைனரின் கார்டியன் பெயரில் கிளைம் செய்யப்படுகிறது என்றால், பின்னர் பாதுகாவலர் சான்றதலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
படிவம்-5IF வெரிஃபை செய்யப்பட வேண்டும்
படிவத்தை நிரப்பிய பிறகு கிளைம் தாக்கல் செய்பவர், EPFO மெம்பர் இறக்கும் சமயத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் ஒப்புதலை பெற வேண்டும். ஒப்புதலை பெற்ற பிறகு படிவத்தை சமர்ப்பிக்கலாம். ஒருவேளை நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில் பின்வரும் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதலை பெறலாம்-
*நீதிபதி
*அரசு அலுவலர்
*யூனியன் வாரியம் இல்லாத கிராம பஞ்சாயத்தின் தலைவர் நகராட்சி/மாவட்ட உள்ளாட்சி வாரியத்தின் தலைவர்/செயலாளர்/உறுப்பினர்
*பாராளுமன்ற/சட்டசபை உறுப்பினர்கள்
CBT/பகுதிக்குழு/EPF மெம்பர்கள்
*உங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கக்கூடிய வங்கியின் மேனேஜர்
*அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர்.
EDLI திட்டத்தின் பலன்களை யாரெல்லாம் பெறலாம்?
EPFO வெப்சைட்டின் படி, கிட்டத்தட்ட 187 நிறுவன வகைகள் இந்த திட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த 187 நிறுவன வகைகள் மற்றும் 19 நபர்களுக்கு மேல் ஊழியர்களை கொண்ட எந்த ஒரு நிறுவனமும் தாமாகவே EPF & MP விதி 1952 -இன் கீழ் பலன்களைப் பெறுவார்கள். இந்த நிறுவனங்களின் பணி புரியும் எம்பிளாயிகள் EDLI திட்டத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.