இந்த புதிய ரூல்ஸை நோட் பண்ணுங்க..! இனி ஆதார் கார்டை பெற கைரேகை தேவையில்லை..?
இந்தியாவின் அடையாள ஆவணங்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது ஆதார் அட்டை. இது தற்போது வங்கி கணக்கு திறப்பது, கேஸ் சிலிண்டர் பதிவு மற்றும் அரசின் நலத்திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய ஆதார் அட்டையானது பயனர்களின் கருவிழிப் படலங்கள், கைரேகை (10 விரல்கள்), முகத்தின் புகைப்படம் மற்றும் மக்கள் தொகை தரவை அடிப்படையாகக் கொண்டு UIDAI நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டையை பெற இயலாத கை விரல்கள் இல்லாத கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜோசிமோல் பி ஜோஸ் என்ற பெண் ஆதார் வேண்டி புகார் அளித்தார்.
இந்த புகார் மீதான நடவடிக்கையாக அந்த பெண்ணின் கருவிழிப் படலங்கள் மற்றும் முக புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு ஆதார் அட்டை வழங்குமாறு ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கைரேகைகள் இல்லாத அல்லது கைரேகைகள் கிடைக்காத நிலையில் கண்களின் ஐரிஸ் ஸ்கேன் மூலம் ஆதாருக்கு பதிவு செய்யலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையானது நாடு முழுவதும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை myAadhaar என்ற வலைதள பக்கம் மூலம் ஆன்லைனில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த ஆதார் புதுப்பிப்பு மற்றும் தவறாக உள்ள பயனர் பெயர் / வீட்டு முகவரி / கைபேசி எண்ணை மாற்றும் சேவை இன்னும் 02 நாட்களில் முடிவடைய உள்ளது. எனவே இந்த ஆன்லைன் சேவைகளுக்கு இனி ரூ.50/- முதல் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் ஆதார் அமைப்பு சார்பாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.