மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ள Nothing Phone 2a மொபைல்.. முழு விவரம் இதோ!
நத்திங் நிறுவனத்தின் புதிய Phone 2a மொபைலின் வெளியீட்டு தேதி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் வரவிருக்கும் நத்திங் ஃபோன் மாடலின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய Phone 2a வரும் மார்ச் 5-ஆம் தேதி நடைபெற உள்ள உலகளாவிய நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது. புதிய நத்திங் ஃபோன் 2ஏ மொபைலானது நத்திங் நிறுவனத்தின் பட்ஜெட் – ஃபிரெண்ட்லி மொபைலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nothing Phone 2a மொபைல் வெளியீட்டு தேதி மற்றும் நேரம் :
இந்த புதிய மொபைலின் வெளியீட்டு தேதி மேலே குறிப்பிட்டது போல மார்ச் 5 ஆகும். அன்றைய தினம் 5PM IST-ல் உலகளவில் வெளியிடப்பட உள்ளது. ஆனால் இந்த ஈவன்ட்டில் நத்திங் நிறுவனம் வெளியிட உள்ள ஒரே தயாரிப்பாக Nothing Phone 2a இருக்க கூடும். நேற்று (பிப்ரவரி 26) துவங்கி பிப்ரவரி 29 வரை நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் 2024-ல் நத்திங் நிறுவனம் அதன் வரவிருக்கும் இந்த மொபைலை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் Nothing Phone 2a மொபைலின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் :
ஃபோன் 2ஏ-வானது நத்திங் ஓஎஸ் வெர்ஷனை கொண்டிருக்க கூடும், இது நம்பகமான சாஃப்ட்வேர் ஆப்ஷன்களில் ஒன்றாகும். மேலும் நத்திங் நிறுவனம் Phone 2a-வில் MediaTek Dimensity ப்ராசஸராய் கொடுக்கலாம். இதனால் Nothing Phone 2-ஐ விட மலிவு விலையில் Phone 2a கிடைக்கலாம் மற்றும் இந்த ஃபோனை தயாரிப்பதற்கான மெட்டீரியல்களிலும் மாற்றங்கள் இருக்கலாம்.
வரவிருக்கும் Phone 2a மொபைலானது 50MP சென்சார்கள் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் மற்றும் 45W அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பீட்டிற்கான சப்போர்ட்டுடன் கூடிய பெரிய அளவிலான பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Nothing Phone 2a-வின் துவக்க விலை ரூ.30,000-க்குள் இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் nothing Phone 2a 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய 6.7-இன்ச் FHD OLED டிஸ்ப்ளே, செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP முன்பக்க கேமராவை கொண்டிருக்க கூடும். பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் அறிமுகமானாலும் இந்த ஃபோன் ஃபிளாக்ஷிப் டிவைஸ்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இது 12GB வரை ரேம், 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் உடன் வர கூடும். மேலும் இந்த மொபைல் டார்க் கிரே மற்றும் ஒயிட் என 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.