இனி ஒவ்வொரு டாக்ஸி ஆஃப்களில் ஒவ்வொரு கட்டணம் காட்டாது – கர்நாடகா அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டம்..!

டாக்ஸி புக் செய்தால் பயணிகள் இருக்கும் இடத்திற்கே வந்து பிக்கப் செய்து செல்கின்றனர். இத்தகைய சேவையை ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட தூரத்திற்கான கட்டணம் ஒவ்வொரு நிறுவனத்தின் சேவைக்கு ஏற்ப மாறுபடுகிறது.இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் கர்நாடகா மாநில அரசு போக்குவரத்து கழகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, ஒரே மாதிரியான நிலையான கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஓலா, உபர் என எந்த டாக்ஸி நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தினாலும் பயணக் கட்டணம் என்பது குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரே மாதிரியாக தான் இருக்கும். இது பயணிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் படி,

வாகனத்தின் மதிப்பு (லட்ச ரூபாய்) கிலோமீட்டர் கட்டணம்
10 லட்ச ரூபாய்க்கு கீழ் 4 கி.மீ வரை ரூ.100
4 கி.மீ மேல் ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் தலா ரூ.24
10 – 15 லட்ச ரூபாய் 4 கி.மீ வரை ரூ.115
4 கி.மீ மேல் ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் ரூ.28
15 லட்ச ரூபாய்க்கு மேல் 4 கி.மீ வரை ரூ.130
4 கி.மீ மேல் ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் ரூ.32

கர்நாடகா அரசின் ஒரே கட்டண நடைமுறை திட்டத்தின் பலன்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபுறம் அனைத்து டாக்ஸி சேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரே மொபைல் ஆப்பை தயாரிக்கும் திட்டத்தை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *