குறைந்த விலையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான தருணம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக வேகமாகப் பிரபலமடைந்துக் கொண்டிருக்கின்றன. FAME || எனப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதால், எலெக்ட்ரிக் வாகனங்களை மிக குறைவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு இப்போது உள்ளது. ஆனால், இந்த திட்டம் வரும் மார்ச் 31, 2024 அன்றுடன் மாறுபட உள்ளது.

இந்த FAME || திட்டம் மிக விரைவில் காலாவதியாக இருப்பதனால், மின்சார வாகனங்களின் விலை மிக கணிசமாக உயரும் நிலை உள்ளது. மின்சார வாகனங்களை வாங்க உள்ளவர்கள் இந்த FAME || மானிய திட்டம் காலாவதி ஆகும் முன்னரே அதனை வாங்கிக் கொள்வது நல்லது.

இந்த சூழலில், மின்சார வாகனங்களை வாங்குவதற்கு திட்டமிடுபவர்களுக்கு சிறந்த மின்சார வாகனங்களை தேர்வு செய்வது அவசியம். இதில், TVS iQube இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக கூறலாம்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பங்களுக்கான தலைசிறந்த மின்சார வாகனமாகவும் உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டருக்கு FAME || திட்டத்தின்கீழ் ரூ. 22,065 வரை மானியம் கிடைக்கிறது. இது மாபெரும் சேமிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், TVS iQube வாங்குபவர்களுக்கும் மிகச் சிறந்த பலனை வழங்கக் கூடியதாகவும் கருதமுடியும்.

மேலும், இந்த மார்ச் மாதத்தை முன்னிட்டு ரூ. 18,499-க்கான கூடுதல் சிறப்புப் பலனையும் TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கிப்பட்டு வருகிறது. TVS iQube ஓர் முழு சார்ஜில் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும். 3.4 kWh பேட்டரியை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளது. இதனால்தான் இந்தியக் குடும்பங்களின் விருப்பமான தேர்வாக TVS iQube கருதப்படுகிறது. இதுவரை 2.5 லட்சம் திருப்திகரமான வாடிக்கையாளர்களைக் கொண்ட தயாரிப்பாகவும் TVS iQube உள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் வரும் மார்ச் 31ந் தேதிக்குள், புதிய மின்சார வாகனங்களை வாங்கிவிடுவதே நல்லது. விலைகள் உயரும் முன் TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *