இனி ரவை உப்புமா இப்படி செய்யுங்க: செம்ம சுவையா இருக்கும்
இப்படி உப்புமா செய்தால், எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
ரவை – 2 கப்
தண்ணீர் – 2 1/2 கப் (இரண்டரை கப்)
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – தேவையான அளவு
உளுந்து – தேவையான அளவு
கடலைப்பருப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
செய்முறை: 2 கப் ரவைக்கு 2½ கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதாவது , 1 கப் ரவைக்கு 11/4 கப் அளவு சேர்க்க வேண்டும். அப்போது தான் ரவை ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும்.
முதலில் அடுப்பில் கடாய் வைத்து ரவைவை வறுக்க வேண்டும். ரவை வறுபட்டதும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அடுத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை நறுக்கி சேருங்கள். அடுத்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தண்ணீர் இரண்டரை கப் அளந்து சேர்க்கவும். அதில் தேவையான அளவு உப்பு போடவும். பிறகு வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடுங்கள். பிறகு மூடி போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மூடியை திறந்து 1 முறை கரண்டு கொண்டு நன்கு கிளறவும். பிறகு 5 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை கிளறி விடவும். பிறகு 2 நிமிடம் விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இப்படி செய்யும் போது உப்புமா ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும்.