இனி பூரிக்கு உருளைக்கிழங்கு குருமாவை இப்படி செய்து பாருங்கள்… அவ்வளவு ருசியாக இருக்கும்.!
பூரி’ சாப்பிடலாம் என்று நினைத்தாலே நம் நினைவிற்கு சேர்ந்து வருவது குருமா தான். ‘பூரி – குருமாவை’ எப்போதுமே பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கு குருமாவை சுவையாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக் கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
அரைத்த தேங்காய் – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
இலவங்கப் பட்டை – 1 துண்டு
பிரிஞ்சி இலை – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இல்லை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பூரிக்கு குருமா செய்ய முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் அல்லது பாத்திரத்தில் போட்டு வேகவைத்து தோலை நீக்கி வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும்.
எல்லாம் ஓரளவிற்கு பொரிந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் வேகவைத்து நறுக்கி வைத்துள்ள உருளைக் கிழங்கை இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
இப்போது இவற்றுடன் சோம்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
குருமா நன்கு கொதித்ததும் கடைசியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து மூடி வைக்கவும்.
ஒரு 2 நிமிடம் குருமாவை கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான பூரி ‘குருமா’ தயார்…