இனி வீட்டிலேயே செய்யலாம் தலப்பாகட்டி இறால் பிரியாணி
பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அனைவருமே விரும்பி சாப்பிடுவது இந்த பிரியாணியை தான். இதை சாப்பிட்டால் போது ராஜ விருந்தை சாப்பிட்டது போன்று உணர்வீர்கள்.
எனவே அனைவருக்கும் மிகவும் பிடித்த தலப்பாகட்டி இறால் பிரியாணி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1/4 கி – சீரக சம்பா அரிசி
1/4 கி – இறால்
10 – சின்ன வெங்காயம்
1 துண்டு – இஞ்சி
10 பல் – பூண்டு
3 – பச்சை மிளகாய்
5 – முந்திரி
1 பட்டை, கிராம்பு, பச்சை பிரிஞ்சி இலை
1 – அன்னாசி பூ
1 கப் புதினா, கொத்தமல்லி
1 – டீஸ்பூன் மல்லி தூள்
1 – டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1 – டீஸ்பூன் சீரகத்தூள்
2 – டேபிள் ஸ்பூன் தயிர்
4 டேபிள் ஸ்பூன் – நெய்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்துக்கொள்ளவும்.
அடுத்து மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தனியாக அரைத்துக்கொள்ளவும்.
பின் முந்திரி, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசி பூ, கல்பாசி பூ சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்து வைத்த விழுது மற்றும் மசாலா சேர்த்து வதக்கவும்.
பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து, தயிர் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
பின் இறால் மற்றும் அரிசி சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.
இறுதியாக நெய் விட்டு கிளறி எடுத்தால் சுவையான தலப்பாகட்டி இறால் பிரியாணி தயார்.