NRI மக்களே.. இதை மிஸ் பண்ணாம படிங்க..!
NRI என அழைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது, சொத்து வாங்குவது ஆகியவை குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு பின் அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் , இந்திய நிறுவனங்களில் தங்களுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மற்றவருக்கு பரிசளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.
இந்திய நிறுவன பங்குகளை பரிசளிக்கலாமா?: உதாரணத்திற்கு, அருண் குமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் செட்டிலாகி பணிபுரிந்து வருகிறார். அண்மையில் அவரது தந்தை இறப்புக்குப் பின், அவர் பெயரில் இருந்த சொத்து பிரிக்கப்பட்டு, அதன் மூலம் இந்திய நிறுவனங்களில் தந்தைக்கு இருந்த சொத்து, மகன் என்ற முறையில் அருண் குமாருக்கு கிடைத்திருக்கிறது.
இதனை தனது மகளுக்கு பரிசாக இந்தியாவிலேயே இருக்கும் தனது சகோதரிக்கு வழங்க வேண்டும் என அருண்குமார் விரும்புகிறார். ஆனால் இதற்கு இந்திய சட்டம் அனுமதி கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
FEMA சட்டம் சொல்வது என்ன?: தந்தையின் சொத்து என்ற வகையில் அருண் குமார் தனது மகளுக்கு பங்குகளை வழங்க முடியும். இந்திய வருமான வரி சட்டத்தின் படி பங்குகளை மாற்றும் போது, அருண் குமாருக்கு மூலதன ஆதாயங்களில் (capital gains) இருந்து விலக்கு கிடைக்கும்.
அதே நேரத்தில் பங்குகளை பரிசாக பெறும் சகோதரிக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. இதன் மூலம் TDS எனப்படும் மூலத்தில் கழிக்கப்படும் வரி பிடித்தமும் செய்யப்படாது. பரம்பரை வாரிசாக பங்குகளை பெற்றுள்ளதால் அந்திய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) கீழ் திரும்ப அனுப்ப முடியாத பிரிவில் வைத்திருக்கும் பங்குகள் என இவை கருதப்படும்.
பங்குகளை பரிசாக வழங்க வழிமுறைகள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடையில் FEMA-வின் கீழ் பங்குகளை பரிசாக வழங்க இரண்டு முறைகள் உள்ளன.
பங்குகளை பரிசாக வழங்க வழிமுறைகள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடையில் FEMA-வின் கீழ் பங்குகளை பரிசாக வழங்க இரண்டு முறைகள் உள்ளன.
1. நாடு திரும்பும் (repatriation) அடிப்படையில் வைத்திருக்கும் நன்கொடையாளருக்கு வழங்கப்படும் பரிசு
2. நாடு திரும்பாத (non – repatriation) அடிப்படையில் வைத்திருக்கும் நன்கொடையாளருக்கு வழங்கப்படும் பரிசு
நாடு திரும்பும் அடிப்படையிலான பரிசு: இந்திய நிறுவன பங்குகளை நாடு திரும்பும் அடிப்படையில் வைத்திருக்க விரும்பும் நன்கொடையாளருக்கு (அதாவது, நன்கொடையாளர் விற்பனைக்கு பிறகு, வரிக்கு பிந்தைய வருமானத்தை இந்தியாவுக்கு வெளியே முழுமையாக அனுப்ப முடியும்) அளிக்கப்பட்டால், நன்கொடையாளர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன் ஒப்புதலை பெற வேண்டும்.
இது சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனங்களின் மூலதனத்தில் 5%க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் பங்குகளின் மதிப்பு நிதியாண்டுக்கு 50,000 டாலர்களை தாண்டி இருக்க கூடாது என்பது விதிமுறை.
நாடு திரும்பாத வகையிலான பரிசு: ஒருவேளை நாடு திரும்பாத அடிப்படையில் வைத்திருக்கும் நன்கொடையாளருக்கு பரிசு வழங்கப்பட்டால், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற தேவையில்லை, திருப்பி அனுப்பப்படாத வழிமுறையின் கீழ், நன்கொடை பெறுபவர் விற்பனை வருமானத்தை (வரிக்குப் பிறகு) ஒரு நிதியாண்டுக்கு 1 மில்லியன் டாலர் வரை விற்பனைக்கு பின் இந்தியாவுக்கு வெளியே அனுப்ப முடியும்.
இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றினால் சட்ட சிக்கல்கள் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.