NRI மக்களே! இந்திய ரியல் எஸ்டேட் முதலீட்டில் எக்கச்சக்க லாபம்.. முதலீடு செய்ய முழு வழிகாட்டி..!

உலகளவில் வளர்ச்சி கண்டு வரும் முன்னணி பொருளாதார நாடாக இந்திய பொருளாதாரம் திகழ்கிறது. 2026ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க இந்தியா தயாராகி வருகிறது.
இதன் மூலம் வலுவான வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சியின் இந்தியா மையப்புள்ளியாக மாறியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2023ஆம் நிதியாண்டில் மட்டும் வெளிநாட்டு முதலீடு வாயிலாக 112 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. உலகளாவிய பொருளாதார சந்தை மாற்றம் கண்டு வரும் நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கவனம் இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையை நோக்கி திரும்பியுள்ளது. வெளிநாடு இந்தியர்களுக்கு இங்குள்ள ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன, அவர்கள் எவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டி இது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏன் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய வேண்டும்?: வேகமாக வளர்ச்சி வாய்ப்புகள் உடன் மாறும் தன்மையுடன் இருக்கும் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில், முதலீட்டாளர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்குகிறது.எனவே இந்திய ரியல் எஸ்டேட் துறையின் தனித்துவமனான அம்சங்கள் நன்கு அறிந்து கொள்வது அவசியம். பெருநகரங்களை ஆக்கிரமித்து வரும் குடியிருப்புகள் முதல் தொடர்ந்து வளர்ந்து வரும் வணிக நகரங்கள் வரை நாம் நாட்டை போல பரந்து விரிந்த ஒரு துறை தான் ரியஸ் எஸ்டேட்.
இதனால் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆற்றல்மிக்க துறையில் முதலீடு செய்வதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கவனம் திரும்பியுள்ளது.நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) போன்ற பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள் மீதான நம்பிக்கை நீடித்தாலும் , வணிகம் சார்ந்த ரியல் எஸ்டேட் துறை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற தொடங்கியுள்ளது.வாடகை வருமானம் உயர்வு, சாதகமான அரசு கொள்கைகள், சொந்த நாட்டுடன் உணர்வு ரீதியான தொடர்பு மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் மீள் தன்மை ஆகிய காரணிகளால் 2024ஆம் ஆண்டில் வளர்ச்சி காணும் துறை என்ற எதிர்ப்பார்ப்பை தக்க வைத்துள்ளது.எனவே வெளிநாடு வாழ் இந்தியர்களின் இத்துறையின் மீது முதலீட்டை குவிப்பதற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கான மையமாக தொடர்ந்து நீடித்து வருகின்றன.இந்த நகரங்களில் வாடகை வருமானம் உயர்வது மட்டுமல்லாமல் சொத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.