NSC: ஜீரோ ரிஸ்க், அதிக வட்டி.. இளைஞர்களுக்கு சூப்பரான ஒரு சேமிப்பு திட்டம்..!

பணம் சேமிப்பு, முதலீடு என யோசிக்கும் போது நாம் அனைவரும் கூறுவது, லாபமும் இருக்கனும், முதலுக்கும் மோசம் போக கூடாது என்பது தான்.

அப்படி ஒரு பாதுகாப்பான மற்றும் லாபம் தரக்கூடிய அட்டகாசமான அஞ்சலக சேமிப்பு திட்டம் தான் தேசிய சேமிப்பு பத்திரம் எனப்படும் National Savings Certificate (NSC).ரிஸ்க் குறைவு..

சேமிப்பு அதிகம்..: நமது அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமானது தேசிய சேமிப்பு பத்திரம். வரிச் சலுகையுடன் நல்ல ரிடர்னும் கிடைப்பதால் நம்பிக்கையுடன் இதில் முதலீடு செய்யலாம். அரசு அவ்வப்போது இதன் வட்டி விகிதத்தை மாற்றி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, தேசிய சேமிப்பு பத்திர முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்?: இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். உங்கள் பெயரிலோ அல்லது மைனராக இருக்கும் குழந்தைகள் பெயரிலோ முதலீடு செய்யலாம்.

இரண்டு பேர் இணைந்து கூட்டாகவும் முதலீடு செய்ய முடியும்.ஏன் சிறந்த முதலீடு?:நிலையான வருமானம்: ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. அதுவும் கூட்டு வட்டியாக கணக்கிடப்படுகிறது. பொதுவாக இது வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையை விட அதிகம்.

வரிச்சலுகை: வரிச்சலுகை பெறுவதற்காக நல்ல முதலீடு திட்டங்களை தேடி கொண்டிருப்பவர்களுக்கு ஏற்றது இது. தேசிய சேமிப்பு பத்திரத்தில் செய்த முதலீடுகளை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் சுட்டிக்காட்டி ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெற முடியும்.ரூ.1000 இருந்தாலே முதலீடு செய்யலாம்: தேசிய சேமிப்பு பத்திரத்தின் சிறப்பே குறைந்தபட்சம் ரூ.

1,000இல் இருந்து முதலீட்டை தொடங்கலாம். எனவே சாமானிய மக்களும் எளிதாக இதில் முதலீடு செய்து பலனை பெற முடியும்.முதிர்வு காலம்: தேசிய சேமிப்பு பத்திரத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் முதலீடு செய்த தேதியில் இருந்து 5 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரே உங்களால் பணத்தை எடுக்க முடியும்.கடன் பிணையமாக காட்டலாம்

வங்கிகள் , தேசிய சேமிப்பு பத்திரத்தை பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கான பிணையமாக ஏற்கின்றன.முதிர்வு தொகைக்கு வரி இல்லை: 5 ஆண்டுகள் முடிவடைந்த பின்னர், மொத்த முதிர்வு தொகையும் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். இந்த தொகைக்கு TDS எனப்படும் மூலத்தில் கழிக்கப்படும் வரி கிடையாது.

அதே போல முதல் 4 ஆண்டுகளில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி தொகை மூலத்தொகையுடன் சேர்க்கப்படுவதால் வட்டி கிடையாது.ஆனால் 5ஆவது ஆண்டில் கிடைக்கும் வட்டி தொகை ‘income from other sources’இல் சேர்க்கப்படும்.

பட்டய கிளப்பும் புதிய LIC கிரெடிட் கார்டு..! குறைந்த வட்டி, அதிரடி சலுகைகள்..! முதிர்வு காலத்திற்கு முன் திரும்ப பெற முடியுமா?: வழக்கமாக , 5 ஆண்டுகள் லாக் இன் முடிவடைவதற்குள் முதலீட்டை திரும்ப பெற இயலாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *