குளிருக்கு இதமாக, சத்து நிறைந்த கேரட் இஞ்சி சூப்: சிம்பிள், ஈஸியா செய்திடலாம்

குளிருக்கு இதமாகவும், சுவை நிறைந்தாகவும் இருக்கும் கேரட் இஞ்சி கலந்த சூப் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேரட் – 2
இஞ்சி – சிறிதளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
பூண்டு – 6 பல்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க சிறிதளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட்டை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் 5 நிமிடங்கள் வரை இதை வேகவிடுங்கள். அடுத்ததாக இதில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளைச் சேர்க்கவும்.
இப்போது சிறிதளவு (சூப்பிற்கு தேவையான அளவு) தண்ணீர் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து நன்கு 15 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும். நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆறவிடுங்கள். ஆறியதும் இதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துப் பின் வடிகட்டினால் சூப் ரெடி. மேலே கொத்தமல்லி இலைகளும், சிறிது மிளகுத் தூளும் தூவிக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான சூப் ரெடி.