NZ vs BAN T20: மழை குறுக்கீடு.. நியூசிலாந்து-வங்கதேசம் 2வது டி20 ஆட்டம் ரத்து

கனமழை காரணமாக நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது t20 ஆட்டம் வெள்ளிக்கிழமை கைவிடப்பட்டது, நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 72-2 என்ற நிலையில் இருந்தது.

நேப்பியரில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 2வது டி20 கிரிக்கெட்டில் டாஸ் வென்று வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, நியூசிலாந்து அணி விளையாடியது. 11 ஓவர்களில் 72-2 என்று இருந்தபோது திடீரென மழை பெய்ய தொடங்கியது. டேரில், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, இடைவிடாமல் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. முன்னதாக, நேப்பயரில் முதல்முறைய வங்கதேச அணி டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்தை சாய்த்தது.

டிம் சீஃபர்ட் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். ஃபின் ஆலன் 2 ரன்களில் நடையைக் கட்டினார். டேரில் 18 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடன் இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது மற்றும் கடைசி டி20 மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறும் போது வங்கதேசம் ஜெயித்தால் அந்த அணி தொடரை கைப்பற்றும். முன்னதாக, இதே சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என ஜெயித்தது. தற்போது வங்கதேசம் 1-0 என டி20 தொடரில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது பாக்ஸிங் டே டெஸ்டான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது.

பின்னர், விளையாடிய பாகிஸ்தான் 264 ரன்களில் சுருண்டது. 54 ரன்கள் முன்னிலையில் ஆஸி., 2வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணி 84.1 ஓவர்களில் 262 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர், 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், அந்த அணியால் கடைசி நாளான இன்று 237 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அகா சல்மான்,கேப்டன் ஷான் மசூத் ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர்.மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்ஸில் விழ்த்தினார். முதல் இன்னிங்ஸிலும் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை காலி செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *